கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக ரேவண்ணா நியமனம்.. பெங்களூர் சிறை தலைமை கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா புதிய சிறைத்துறை டிஐஜியாக ஹெச்.எஸ்.ரேவண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணாவுக்கு பெங்களூரு மத்திய சிறை தலைமை கண்காணிப்பாளராக கூடுதல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறையின் தலைமை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு புதிதாக எந்த பதவியும் ஒதுக்கப்படவில்லை.

Senior IPS officer Revanna appointed as DIG prison

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா கொடுத்த குற்றச்சாட்டு அறிக்கை லீக்கானதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

இதையடுத்து கண்காணிப்பாளராக இருந்த அனிதாவை தலைமை கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்தது கர்நாடக அரசு. ஆனால் அவரும் முறைகேட்டில் தொடர்புள்ளவர் என்று சிறை கைதிகள் தர்ணா நடத்தினர். டிவி சேனல் ஒன்று வெளியிட்ட வீடியோவில் சசிகலா ஷாப்பிங் செல்ல சென்றபோது, அனிதா உடனிருந்ததை போன்ற காட்சிகள் வெளியாகின.

Sasikala’s VIP Treatment, DIG Roopa Transferred-Oneindia Tamil

இந்த நிலையில்தான் ரேவண்ணாவுக்கு தலைமை கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அனிதா கண்காணிப்பாளராக தொடர்கிறார். ரூபா வகித்து வந்த டிஐஜி பதவிக்குதான் ரேவண்ணா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior IPS officer Revanna appointed as DIG (prison) & chief superintendent of Bengaluru central prison
Please Wait while comments are loading...