For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்: 15 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

யூரி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 13 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யூரி பகுதியில் துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், சவுரா பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளனர். இதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Six terrorists gunned down at Army camp in Uri; another attack reported from Srinagar

இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் யூரி சர்வதேச எல்லையில் உள்ள ராணுவ முகாமுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் சிலர் நுழைந்தனர்.

2 அல்லது 3 பேர் அந்தக் குழுவில் இருக்கலாம் எனத் தெரிகிறது. மறைந்திருந்து தீவிரவாதிகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் தலைமைக் காவலர் உள்பட 3 போலீஸாரும், ராணுவ வீரர்கள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது" என்றார்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், சண்டை நீடிப்பதால் தீயணைப்பு வாகனங்கள் வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை.

இதனிடையே காஷ்மீர் ராணுவ முகாம் தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், "3 தீவிரவாதிகள் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ளவர்களும் கொல்லப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்னதாக சவுரா பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளனர். இதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் நிலையில் தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகளும், பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்களும் அழைப்பு விடுத்தனர். இதனை பொருட்படுத்தாமல் முதல் இரண்டு கட்ட தேர்தல்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வாக்களித்ததால், வாக்குப்பதிவு 70 சதவீதத்தையும் தாண்டியது.

பாராமுல்லா, யூரி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி 3-ம் கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 8ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The terror attack, which began early Friday morning at an Army camp in Uri Sector of Jammu and Kashmir's Baramullah district, continues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X