For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்களைத் தற்கொலைக்குத் தள்ளும் மன அழுத்தம், விரக்தி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2013 ல் 1,34, 799 பேரும், 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau) தகவல் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொள்பவர்களில் கடந்த மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மகாராஷ்டிராவில் 16,622 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 16,601 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

மனஅழுத்தம், விரக்தி

மனஅழுத்தம், விரக்தி

வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

குடும்ப பிரச்னை

குடும்ப பிரச்னை

குடும்பப் பிரச்னை காரணமாக 24 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2013 ல் 32, 325 பேரும், 2012 ல் 30, 792 பேரும், 2011 ல் 32, 909 பேரும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

தீராத நோய்

தீராத நோய்

தீராத நோய், அதனால் ஏற்படும் வலியின் காரணமாக 2013 ஆம் ஆண்டு 26, 426 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2011 ல் 26,570 பேரும், தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

போதை மருந்து

போதை மருந்து

போதை மருந்து உட்கொண்ட பழக்கம் உடையவர்களில் 2013 ல் 4,591 பேரும் 2012 ல் 4, 008, 2011 ல் 3,658 பேரும், பேரும், தற்கொலை மூலம் உயிரிழந்துள்ளனர்.

வரதட்சணை

வரதட்சணை

வரதட்சணை பிரச்னையால் 2013 ல் 2, 267 பேரும், 2012 ல் 1,935 பேரும், 2011 ல் 3,239 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

காதல் பிரச்னை

காதல் பிரச்னை

காதல் பிரச்னை காரணமாக 2013 ல் 4,495 பேரும், , 2012 ல் 3, 849 பேரும், 2011 ல் 4, 586 பேரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

தேர்வில் தோல்வி

தேர்வில் தோல்வி

தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக 2013 ல் 2, 471 பேரும், 2012 ல்2, 246 பேரும், 2011 ல் 2,381 பேரும், தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

வேலையின்மை

வேலையின்மை

வேலை இல்லா திண்டாட்டம் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இதன் காரணமாக 2013 ல் 2, 090 பேரும் 2012 ல் 1,731 பேரும், 2011 ல் 2, 333 பேரும், தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

வறுமை

வறுமை

வறுமை காரணமாக 2013 ல் 1, 866 பேரும், , 2012 ல் 2, 291 பேரும், 2011 ல் 2, 282 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மதிப்பு குறைந்தால்

மதிப்பு குறைந்தால்

சமூகத்தில் மதிப்பு குறைந்ததன் காரணமாக 2013 ஆம் ஆண்டு 1, 466 பேரும், 2011 ஆம் ஆண்டு 1, 160 பேரும், 2012 ஆம் ஆண்டு 981 பேரும், பேரும் தற்கொலை மூலம் உயிரிழந்துள்ளனர்.

கடன் தொல்லை

கடன் தொல்லை

கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி காரணமாக 2013 ஆம் ஆண்டு 2,678 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு 2, 983 பேரும், 2012 ஆம் ஆண்டு 2, 357 பேரும், தற்கொலை செய்துகொண்டனர்.

நெருங்கியவர்களின் மரணம்

நெருங்கியவர்களின் மரணம்

நெருங்கிய உறவினர்களின் மரணத்தால் மனமுடைந்து 2013 ல் 996 பேரும் 2012 ல் 819 பேரும், 2011 ல் 896 பேரும், தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
A total of 1,34, 799 persons committed suicide in India in 2013, i.e. 15 persons committed suicide in each hour of 2013. Of this 16,622 suicides, 12.3 per cent are from Maharashtra, with TN recording 16,601. Out of the 16,622 suicides, 11,892 were males and 4, 730 were females.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X