நிர்வாண போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை: டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் தமிழக விவசாயிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், காவிரி மேலாண்மை அமைக்க கோரியும் தமிழக விவசாயிகள் 58வது நாளாக பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகின்றனர்.

TN farmers protesting at Jantar Mantar arrested today

மணலில் புதைந்து போராட்டம், உருண்டு போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என தினமும் ஒரு நூதன போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

57வது நாளான நேற்று மனித மலத்தை தின்னும் போராட்டத்தை நடத்தினர். ஏற்கனவே சிறுநீர் குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மனித மலத்தை தின்று கவனத்தை ஈர்த்தனர்.

இந்நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தபோவதாக வந்த தகவலை அடுத்து அவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Delhi police arrested farmers from Tamil Nadu while they perform nude protest in Janthar Manthar.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற