For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாமில் பயணிகள் ரயில் தடம் புரண்டது: 50 பேர் காயம்

Google Oneindia Tamil News

கெளஹாத்தி: அஸ்ஸாமில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் அதில் பயணம் செய்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

திமாபூரிலிருந்து காமக்யா சென்று கொண்டிருந்த 15666 பிஜி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை மத்திய அசாமில் மோரிகன் அருகே அஜூரி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இதில் ரயில் பத்து பெட்டியில் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது.

இந்த விபத்தினால் ரயிலில் பயணம் செய்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் அருகிலிருந்த மோரிகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப்பணி துரிதகதியில் நடை பெற்று வருகிறது.

விபத்தில் சிக்கியவர்கள் குறித்து மேற்கொண்டு விபரங்கள் பெற கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவையாவன...

திமாபூர் : 03862-228404
லும்டிங் : 03674 - 264848/49/50
கவுகாத்தி : 0361 - 2731621/22/23

English summary
Over 50 people were injured after 10 compartments of 15666 BG express train got derailed at Ajuri station near Morigaon in central Assam at the wee hours of Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X