குஜராத் சட்டசபையில் மைக்கை பிடுங்கி அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 ஆண்டுகள் சஸ்பென்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் சட்டசபையில் மைக்கை பிடுங்கி அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் அசரம் பாபு வழக்கு குறித்த நீதிபதி டிகே திரிவேதி கமிஷனின் அறிக்கையை வீசி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும் சபர்மதி ஆசிரமத்தில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி அனுமதிக்காததால் அவர்கள் தொடர்நது அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

பாஜக எம்எல்ஏவுக்கு அடி

பாஜக எம்எல்ஏவுக்கு அடி

இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் டுதட் திடீரென அங்கிருந்த மைக்கை பிடுங்கி பாஜக எம்எல்ஏ ஜெகதீஷ் பஞ்சாலை தாக்கினார்.

அம்ரீஷ் தெர்

அம்ரீஷ் தெர்

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ அம்ரீஷ் தெர் பாஜக எம்எல்ஏக்களை தாக்கினார்.

பெரும் பதற்றம்

பெரும் பதற்றம்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக அம்ரீஷ் தெரை துவைத்தெடுத்தனர். குஜராத் சட்டசபையில் நடைபெற்ற இந்த அடிதடியால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சஸ்பென்ட்

சஸ்பென்ட்

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் டுதட் மற்றும் அம்ரீஷ் தெரை தலா மூன்றாண்டுகள் சஸ்பென்ட் செய்தும், மற்றொரு எம்எல்ஏவான பல்தேப் தாக்கூரை ஓராண்டு சஸ்பென்ட் செய்தும் சபாநாயகர் ராஜேந்தி திரிவேதி உத்தரவிட்டார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

சபாநாயகரின் இந்த கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக அவையில் இருந்து வெளியேறினர். குஜராத் சட்டசபையில் கேள்வி நேரத்துக்குப் பின் இந்த சம்பவம் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two Congress MLAs suspended for three years from the Gujarat Assembly and another for one year after members attacked BJP MLAs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற