சசிகலாவுக்காக தும்கூரில் இருந்து மாற்றப்பட்ட 2 தமிழ் பெண் தாதாக்கள்! ரூபாவுக்கு எதிராக கோஷம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க உதவியாக தும்கூர் சிறையில் இருந்து மேரி, ரேகா என்ற 2 தமிழ்ப் பெண் கைதிகள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மாற்றப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் சசிகலாவுக்கு அடியாட்கள் போல இருந்து கொண்டு டிஐஜி ரூபாவுக்கு எதிராக கோஷம் போட்டுள்ளனர்.

சசிகலா சர்ச்சைகளின் சங்கமம்தான்... பெங்களூரு சிறையில் சொகுசாக இருக்க ரூ2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதிரடி புகார் கூறினார் டிஐஜி ரூபா.

போயஸ் தோட்டம்

போயஸ் தோட்டம்

சசிகலாவுக்கு தனி கிச்சன், உதவியாளர்கள் என பெங்களூரு சிறையையே போயஸ் தோட்டமாக்கி ஆட்டம் போட்டார் சசிகலா என்பதையும் அம்பலப்படுத்தினார் ரூபா. இது கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கைதிகள் மாற்றம்

கைதிகள் மாற்றம்

இதனிடையே ரூபாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கைதிகள் அணி திரண்டுள்ளனர். இதனால் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றியுள்ளது கர்நாடகா அரசு.

2 பெண் கைதிகள்

2 பெண் கைதிகள்

இந்நிலையில் இன்னொரு திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது. சசிகலாவுக்கு உதவி செய்வதற்காகவே தும்கூரில் இருந்து மேரி, ரேகா என்ற தமிழ்ப் பெண்களை பெங்களூரு சிறைக்கு மாற்றியும் இருக்கின்றனராம்.

அடியாட்கள்

அடியாட்கள்

இந்த பெண்கள்தான் சசிகலாவுக்கு அடியாட்கள் போல இருக்கிறார்களாம். இவர்கள்தான் ரூபாவுக்கு எதிராக சிறைக்குள் கோஷ்டி சேர்த்து கொண்டு கோஷம் போட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that Two Tamil Prisoners are helping Sasikala in Bengaluru Jail.
Please Wait while comments are loading...