For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டொரண்ட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்த்தாலே 3 ஆண்டு சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டொரண்ட் போன்ற தடை செய்யப் பட்ட இணையதளங்களைப் பார்த்தாலோ, பைல்களை பதிவிறக்கம் செய்தாலோ 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆபாச வலைத்தளங்களை தடை செய்ததை தொடர்ந்து இந்திய அரசு தற்போது டொரண்ட் வலைத்தளங்கள் மீது குறி வைத்துள்ளது. டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமாக தகவல்களை பகிர்ந்துகொள்ளும் இணையதளங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.

Visiting torrent sites won't land you in jail

டொரண்ட் இணையதளங்கள் மூலம் பல்வேறு தரவுகள் மற்றும் தகவல்களை திருட்டுதனமாக பதிவிக்கம் செய்ய முடியும். இதனால் படைப்பாளிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த செயலானது இந்திய காப்புரிமைச் சட்டத்திற்கு ஏதிரானது. எனவே இந்திய அரசால் தடை செய்யப்பட்ட டொரண்ட் உள்ளிட்ட இணையதளங்களை பார்த்தாலோ அல்லது அதன் கோப்புகளாய் பதிவிறக்கம் செய்தாலோ மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் அபதாரமும் விதிக்கப்படும்.

படைப்பாளிகளைப் பாதிக்கும் டொரண்ட் போன்ற தடை செய்யப்பட்ட இணையதளங்களைப் பார்ப்பவருக்கு 1957ம் ஆண்டில் இயற்றப் பட்ட இந்திய காப்புரிமை சட்டத் தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கலாம் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்குள் செல்வதற்கு முன்னர் அது குறித்து எச்சரிக்கையும் வழங்கப்படும். அதை மீறி உள்ளே சென்று தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது, இணையத்தில் பதிவிடுவது இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் என்றும் தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.

டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமான வலைத்தளத்தை பார்வையிட்டாலோ அதன் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்தாலோ அது ஒரு குற்றச்செயலாக கருதப்படும். மேலும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, இந்த தடைசெய்யப்பட்ட இணையதளங்களை பயன்படுத்துவோர் மீது காப்புரிமைச் சட்டப் பிரிவு 63, 63-A, 65 மற்றும் 65-அ வின் படி தக்க தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட அனைத்து சினிமாக்களையும் தியேட்டரில் வெளியிடும் முன்பே இம்மாதிரித் தளங்கள் வெளியிடுவதால் சினிமாத்துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது என திரைத்துறையினர் பல காலமாகக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த தடை மூலம் தமிழ் சினிமா உலகம் தப்பிக்குமா பார்க்கலாம்.

English summary
The growing list of blocked sites often creates consternation at a time when internet has become a dominant medium for many to be connected with the world, conduct business, engage in entertainment activities and do myriad other things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X