For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கு கருணை காட்டுமாறு நீதிபதி குன்ஹாவிடம் பாதிரியார் பரிந்துரைத்தாரா?

By Shankar
Google Oneindia Tamil News

Was Jayalalithaa tried to convince Justice Cunha?
நீதிபதி டி குன்ஹா வழக்கமாக செல்லும் தேவாலயத்தின் பாதிரியார் மூலம் இந்த வழக்கின் தீர்ப்பை சாதகமாக்க ஜெயலலிதா முயற்சி செய்ததாக ஊர்ஜிதமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திலும் கர்நாடகாவிலும் உள்ள தேவாலயங்களின் நன்மைக்காக தனது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை சமீபத்தில் அந்தப் பாதிரியாரிடம் எடுத்துரைத்துள்ளார் ஜெயலலிதா.

மனம் மகிழ்ந்த பாதிரியாரும் ஞாயிறன்று பூசை முடிந்ததும் நீதிபதி டி குன்ஹாவை அழைத்து, 'உங்களோடு சில நிமிடங்கள் தனியாக பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்' என்று கேட்டாராம்.

நீதிபதி டி குன்ஹா சம்மதித்திருக்கிறார்.

பிரார்த்தனை முடிந்ததும் பாதிரியார் விஷயத்துக்கு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கருணை காட்ட இயலுமா? என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு நீதிபதி குன்ஹா இப்படி பதில் சொன்னாராம்:

‘அன்பு தந்தை அவர்களே, உங்கள் போதனைகளை தேவாலயத்தின் நான்கு சுவர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீதித்துறை விஷயங்களில் தலையிடாதீர்கள். இது என் அறிவுரை மட்டுமல்ல. கடும் எச்சரிக்கையும் கூட. இதற்கு மேலும் இந்த வழக்கு விஷயத்தில் நீங்கள் தலையிட்டால், நான் அணிந்திருக்கும் இந்த புனித சிலுவை பொருத்திய செயினை அறுத்தெறியவும், இதோ கையில் வைத்திருக்கும் புனித பைபிளை வீசியெறியவும் தயங்க மாட்டேன்'.

ஆடிப்போனாராம் பாதிரியார்!

சமூக வலைத் தளங்களில் இந்தத் தகவல்தான் இப்போது பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.

English summary
Was Jayalalithaa tried to convince Justice Cunha? Here is an unconfirmed story rounds in social network.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X