For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஸ்கூல் புராஜக்ட்"டுக்காக.. 11 வயது சிறுமிக்கு சிறப்புப் பேட்டியளித்த மகாராஷ்டிர முதல்வர்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பள்ளியில் அளிக்கப் பட்ட வீட்டுப் பாட புராஜக்ட்டுக்காக அந்த சிறுமிக்கு பிரத்யேகமாக சிறப்புப் பேட்டியளித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமி திருஷ்டி ஹர்சந்திராய் (11). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வரும், திரிஷ்டியின் வீடு மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் தற்போது தங்கியுள்ள சாயாத்ரி விருந்தினர் மாளிகைக்கு அருகில் உள்ளது.

When 11-year-old girl quizzed Maharashtra CM Fadnavis

இந்நிலையில், சமீபத்தில் திரிஷ்டியின் பள்ளியில் வீட்டுப் பாடம் ஒன்றை அளித்துள்ளார்கள். அதன்படி, முதல்வரை பேட்டிக் காண வேண்டும் என திரிஷ்டி நினைத்துள்ளார். இதற்காக முதல்வரின் விருந்தினர் மாளிகைக்கு நேரில் சென்றுள்ளார் திரிஷ்டி. ஆனால், அச்சிறுமியை உள்ளே விட பாதுகாவலர்கள் மறுத்து விட்டனராம்.

இதனால், சோர்ந்து போகாத திரிஷ்டி தனது நோட்டுப் புத்தகத்தில் ஒரு தாளைக் கிழித்து முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், உங்களைச் சந்திக்க முயற்சித்த போது பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. எனவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கடிதம் கிடைத்தவுடன் இந்த செல்போன் எண்ணிற்கு என்னைத் தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களது பாதுகாவலர்களை விட்டு என்னை அழைத்து வரும் படி கூறச் சொல்லவும்.நான் உங்களை பேட்டி காண வேண்டும்' என திரிஷ்டி எழுதினார்.

இந்தக் கடிதத்தை முதல்வரிடம் சேர்ப்பித்தனர் பாதுகாவலர்கள். குழந்தைத்தனமான எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் கண்ட முதல்வர், உடனடியாக நாக்பூர் செல்வதற்கு முன்பாக அச்சிறுமியை அழைத்து பேட்டியளித்துள்ளார்.

முதன்முறையாக முதல்வர் பதவியேற்றிருக்கும் பட்னாவிஸுக்கும் ஐந்து வயதில் மகள் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமி தானே என அசட்டை செய்யாமல் அவரது கேள்விகளுக்குப் பேட்டியளித்த பட்னாவிஸிற்கு பாராட்டுகள் குவிகின்றன.

English summary
An 11-year-old Mumbai girl has easily managed to meet and interview newly-elected Maharashtra Chief Minister Devendra Fadnavis as part of her school project at a time when journalists across the state have been struggling to get his appointment ever since he took oath of office on October 31
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X