For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்போடியாவில் கடலில் வலையை விரித்த போது.. சின்னவர் திரைப்படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்!

Google Oneindia Tamil News

கம்போடியா: உலகிலேயே அதிக எடை கொண்ட திருக்கைவால் மீன் கம்போடியாவில் பிடிபட்டுள்ளது. இதன் எடை 300 கிலோவாக இருந்தது.

கடந்த ஜூன் 13-ஆம் தேதி கம்போடியாவின் மேகாங் ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது வலையை இழுத்த போது இழுக்க முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.

கிட்டதட்ட சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணி வலை வீசும் போது செந்தில் மாட்டிக் கொள்வார். அப்போது அந்த வலையை இழுப்பதற்கு கவுண்டமணி கஷ்டப்படுவார். கவுண்டமணி பட்ட கஷ்டத்தை விட கம்போடியா மீனவர்கள் நிறைய கஷ்டப்பட்டார்கள்.

முத்தம் கொடுக்காதீங்க மாமா.. கெட்ட வார்த்தைல திட்டுறாய்ங்க.. லைவில் சினேகனுக்கு கன்னிகா அட்வைஸ் முத்தம் கொடுக்காதீங்க மாமா.. கெட்ட வார்த்தைல திட்டுறாய்ங்க.. லைவில் சினேகனுக்கு கன்னிகா அட்வைஸ்

 வலை

வலை

ஒரு வழியாக வலையை இழுத்து கொண்டு கரைக்குவந்தனர். அதில் 300 கிலோ எடை கொண்ட திருக்கைவால் மீன் இருந்தது. அது 13 அடி நீளமாக இருந்தது. இந்த மீனை அமெரிக்க ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். கடந்த 2005 ஆம் ஆண்டு 293 கிலோ எடையுடன் பிடிபட்ட திருக்கை வால் மீன்தான் உலகிலேயே அதிக எடை கொண்டதாக இருந்தது.

கம்போடியாவில் 300 கிலோ எடை கொண்ட மீன்

கம்போடியாவில் 300 கிலோ எடை கொண்ட மீன்

ஆனால் தற்போது கம்போடியாவில் பிடிபட்டது 300 கிலோ எடையாகும். இந்த மீனை அந்த நாட்டு மீனவர்கள் மேகோங் அதிசயம் என கொண்டாடி வருகிறார்கள். பௌர்ணமி அன்று இந்த மீன் பிடிக்கப்பட்டதால் உள்ளூர்வாசிகள் இந்த மீனிற்கு போராமி என பெயரிட்டுள்ளார்கள். போராமி என்றால் முழு நிலவு என அர்த்தம்.

 நீண்ட வால்

நீண்ட வால்

இந்த மீனின் வாழ்வியல் முறை, அதன் இடம்பெயர்வு குறித்தெல்லாம் ஆய்வாளர்கள் தெரியவில்லை என கூறியுள்ளனர். இதனால் அதுகுறித்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த மீன் 600 டாலர்களுக்கு மேல் விலை போகும் என சொல்லப்படுகிறது. இந்த திருக்கை வால் மீனுக்கு மருத்துவ குணங்கள் உள்ளது. வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பிக்க நீண்ட வாலை இந்த மீன் பயன்படுத்துகிறது.

சதை

சதை

வாலில் நிறைய முட்கள் இருக்கும். அந்த வாலை நாம் இழுத்தால் கையில் அறுத்துவிடும். திருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள்.

English summary
World's largest freshwater fish caught in Cambodia. It was 300 kg weight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X