ஈரான் கடல் பகுதியில் சிக்கிய தமிழக மீனவர்கள்! நிலைமை என்ன? கன்னியாகுமரி மக்கள் அச்சம்!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் வளைகுடா முழுவதும் போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஈரான் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 50 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து வேலைக்காக சென்ற மீனவர்கள்தான் அங்கு சிக்கியிருப்பதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர், ஈரானில் சிக்கி தவிப்பதாகவும் அவரை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மீனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் குடும்பத்தினர், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து குடுப்பத்தினர் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த, 51 மீனவர்கள் ஈரானுக்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றிருக்கிறார்கள். ஈரானில் போர் மூண்டிருப்பதால், அங்குள்ள தமிழர்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார்கள். எனவே அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று நாங்கள், எம்பி விஜய் வசந்த் உடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இதற்கு முன்னரும் அரசு கொரோனா காலத்தில் இதேபோன்று முயற்சியை மேற்கொண்டிருந்தது. எனவே தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தனர். அதேபோல இந்த முறையும் மீட்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 51 மீனவர்கள் சிக்கியிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளனர்.
-
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி!












Click it and Unblock the Notifications