For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காபூல் அமெரிக்க பல்கலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: மாணவர் ஒருவர் பலி; 21 பேர் படுகாயம்

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா பல்கலைக் கழக வளாகத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தாகவும், 21 மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூலில் அமெரிக்க பல்கலைக்கழகம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 1700 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இங்கு மிகஉயர்ந்த சுவர்களுடன் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

American University of Afghanistan attacked

இங்கு வெளி நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பல்கலைக் கழக நுழைவு வாயில் அருகே நேற்று இரவு பயங்கர குண்டுவெடித்தது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஆப்கான் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் சர்வதேச ஊடகமான அசோசியேட் பிரஸ் புகைப்படக் கலைஞர் படுகாயாமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 21 பேர் படுகாயமடைந்தனர். பல்கலைகழகத்திற்குள் பல மாணவர்களும் பேராசிரியர்களும் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மோதலால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

English summary
Explosions and gunfire rang out at American University of Afghanistan in Kabul on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X