For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கின்னஸில் இடம்பெற்ற 112 வயது ஜப்பான் தாத்தா மரணம்

Google Oneindia Tamil News

டோக்கியோ: உலகின் மிக வயதானவர் என்ற பெருமை படைத்த ஜப்பானைச் சேர்ந்த முதியவர் சகாரி மொமோய் மரணமடைந்தார்.

உலகிலேயே மிக அதிக வயதில் வாழ்ந்து வருபவர் என்று சாதனைப் படைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த சகாரி மொமோய்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர்.

At 112, world's oldest man dies in Japan

111 வயது

இவர் கடந்த ஆண்டு தனது 111வது வயதில் அதிக வயதுடையோர் என்ற கின்னஸ் சிறப்பை பெற்றார்.இவர் டோக்கியோவில் உள்ள ஒரு காப்பகத்தில் வாழ்ந்து வந்தார்.

சிறுநீரக பாதிப்பு

சமீபகாலமாக கிட்னி கோளாறால் அவர் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் மோசமான உடல்நிலையால் கடந்த ஞாயிற்று கிழமை மரணம் அடைந்துள்ளார்.

புகுஷிமாவில் பிறந்தவர்

புகுஷிமாவில் உள்ள மினாமிசோமாவில் 1903 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கின்னஸ் சாதனை

இவர் கடந்த ஆண்டு அதிக வயதில் வாழ்பவர் என்று கின்னஸ் ரெக்கார்டு சான்றிதழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நான் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வேன் என்று கம்பீரமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sakari Momoi, who was recognized as the world's oldest man and credited healthy eating and getting plenty of sleep for his longevity, has died at the age of 112, Japanese media said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X