For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த வருஷம் "புலி ஆண்டு.." நியூ இயரை கொண்டாட கோலாகலமாக ரெடியான சீனா!

By
Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் வசந்தகால புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறார்கள் சீன மக்கள்.

சீன நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்க கொண்டாட்டங்கள் நடக்கும். அதற்காக‌ பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம் இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

பூமியைச் சுற்றும் நிலவின் கோளப்பாதையின் படி சீனாவில் புத்தாண்டு தீர்மானிக்கப்பட்டு, அதன்படி கொண்டாடப்படுகிறது.

 புத்தாண்டு

புத்தாண்டு

அதன்படி, இந்த வருடம் சீனப் புத்தாண்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தைக் கொண்டு மக்கள் கொண்டாடுவார்கள். அதன்படி, அடுத்த ஆண்டு புலி ஆண்டு. இந்த புலி வடிவம் மக்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று சீனர்கள் கருதுகிறார்கள். புலி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளனர்.

 பயணம்

பயணம்

சீன புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 17- ஆம் தேதி முதல் பிப்ரவரி இறுதி வரை நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் சீனா முழுவதும் பயணம் செய்வார்கள். பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்தங்களை சந்திப்பார்கள். இதனால் சீனாவில் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 திண்பண்டம்

திண்பண்டம்

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான தின்பண்டங்கள் தயாரிக்கும் பணிகளும் களைகட்டியுள்ளன. சந்திர புத்தாண்டை வரவேற்கும் விதமாக, கடந்த ஆண்டு ஓலாங் தேசிய பூங்காவில் பிறந்த 20 பாண்டா குட்டிகள் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது பாண்டா குட்டிகள் நடத்திய சேட்டைகள் காண்போரை அவற்றின் மீது காதல் கொள்ள வைத்தது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா

கொரோனா

இந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்காமல் இருக்க சீன அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதே நேரத்தில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Chinese people are getting ready to welcome the Spring New Year in China. Celebrations will take place to welcome the New Year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X