For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பிடவிடாமல், தூங்கவிடாமல் வேலை வாங்கினார்: தேவ்யானி மீது பணிப்பெண் குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூயார்க்: இரவு, பகல் பாராமல் என்னிடம் வேலை வாங்கினார். சாப்பிடக் கூட விடாமல் என்னை துன்புறுத்தினார் என்று இந்திய துணைத்தூதர் தேவ்யானி மீது அவரது வீட்டில் பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்ட்டு புகார் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்த தேவயானியின் வீட்டிற்கு வேலைக்காக இந்தியாவில் இருந்து சென்றார் சங்கீதா ரிச்சர்ட்டு.

இவருக்கு விசா வாங்க பொய்யான தகவல்களை கூறி மோசடி செய்ததாகவும், மிக குறைந்த அளவில் சம்பளம் கொடுத்ததாகவும் தேவயானி மீது புகார் கூறப்பட்டது.

devyani

இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேவ்யானி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பல பிரச்சினைகள் எழுந்தன.

ஆனால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பணிப் பெண் சங்கீதா ரிச்சர்டு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்தார்.

தேவ்யானி நேற்று இந்தியா திரும்பிய நிலையில் இது பற்றி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் சங்கீதா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேவ்யானி வீட்டில் என்னிடம் ஏராளமான வேலைகளை வாங்கி சித்ரவதை செய்தனர். இதனால் எனக்கு சாப்பிடுவதற்கோ, தூங்குவதற்கோ மற்றும் எனது பணிகளை கவனிப்பதற்கோ போதிய நேரம் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டேன்.

எனது குடும்பத்திற்கு பணம் தேவைப்பட்டது. அதற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலைக்காக அமெரிக்கா வந்தேன். ஆனால் இங்கு இவ்வளவு மோசமான நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை.

தேவயானியின் வீட்டில் என்னை அவமரியாதையாக நடத்தினார்கள். எனவே இந்தியாவுக்கு திரும்ப நான் முயற்சி செய்தேன். அதற்கு அவர்கள் அனுமதி அளிக்கவில்லை.

அமெரிக்காவில் என்னைப் போன்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வீட்டு வேலைகக்காரர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன்.

உங்களுக்கு என்று பல உரிமைகள் உண்டு. எனவே உங்களை சுரண்ட யாரையும் அனுமதிக்காதீர்கள் என்று ஒரு அறிக்கை முலம் சங்கீதா ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை சங்கீதா சார்பில் அமெரிக்காவின் ‘சேப் ஹாரிசன்' என்ற அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்புதான் சங்கீதா ரிச்சர்ட்டுக்காக வாதாடி வருகிறது.

English summary
Sangeeta Richard, the Indian national who was a housekeeper for former Indian Deputy Consul General Devyani Khobragade, said that during her employment in New York she had so much work to do that she barely had time to sleep or eat and was refused the option to quit and return home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X