For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவத்தில் இவ்வளவு அழகாக பெண்ணா? சீனாவில் வைரலான அதிகாரியின் படம்...

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ராணுவத்தில் இவ்வளவு அழகானப் பெண்ணா என்ற ரேஞ்சில் எல்லோரும் வியக்கும் வண்ணம், பெண் ராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ வைரலாக சீன சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

அண்மையில் சீனாவில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீனாவில் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொண்ட ராணுவ அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் சீன அரசு ஈடுபடுத்தியது.

Female G20 security officer a hit online

இந்தப் பாதுகாப்பு பணியில் சீனப் பெண் ஒருவர் ஈடுபடுத்தப்பட்டார். அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, எடுக்கப்பட்ட படங்கள் வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஷு சிங் இளமைப் பருவம்

சீனாவின் தென் பகுதியில் உள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் ஷு சின். இவர் சிறுவயதில் பாடகியாக ஆக வேண்டும் என்பதே ஆசையாம். ஆனால் நாளடைவில் படித்து வளர்ந்த ஷு சின் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ராணுவத்தில் பணி

கடந்த 2013 ஆம் ஆண்டு சீன ராணுவத்தில் ஷூ சின் சேர்ந்தார். மிகவும் அழகான 10 உறுப்பினர்களில் ஒருவராக அவர் ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து சீன ராணுவத்தில் குறிப்பிடத்தகுந்த பெண் ராணுவ அதிகாரி என பெயர் பெற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

ஜி20 மாநாட்டு பாதுகாப்பு

இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடு கடுமையாக்கப்பட்டிருந்தன. இந்தப் பணியின் போது ஷு சின் மிடுக்காக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.

வைரல் போட்டோ

ஷு சின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவைகளில் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. இதனையடுத்து, ராணுவத்தில் இவ்வளவு அழகான பெண்ணா என்ற ரீதியில் சீனா முழுவதும் பேசப்படும் அழகிய பெண்ணாக ஷு சின் உருவாகிவிட்டார். இதனையடுத்து, சீனாவில் உள்ள இளைஞர்கள் பலரும் பெண் ராணுவ அதிகாரி குறித்த கருத்துக்களையும் போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

பத்திரிகைகள் பாராட்டு

இதனிடையே, சீனப் பத்திரிகைகள் ஷு சின்னின் பாதுகாப்பு பணிகள், ராணுவ அதிகாரியாக அவர் பணியாற்றும் விதம், ஆர்வம் உள்ளிட்ட பல அம்சங்களை புகழ்ந்து எழுதி வருகின்றன.

English summary
Shu Xin works as a security officer at the 11th G20 summit, which was held in Hangzhou, Zhejiang province from Sep 4-5, 2016. Her photo at work went viral online as it's rare to see a woman performing such a job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X