இராசா கிருசுணமூர்த்தி, கிளேரன்சு சே, பழனி குமணனுக்கு ஃபெட்னாவின் அமெரிக்க தமிழர் முன்னோடி விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக பேரவையின் தமிழ் விழாவின் போது வழங்கப்படும் அமெரிக்க தமிழர் முன்னோடி விருது 2017 இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கடந்த 2014 முதல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக பேரவையின் தமிழ் விழாவின் பொழுது "அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது" அறிவிக்கப்பட்டு விழா மேடையில் முன்னோடிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.

FeTNA 2017 awardees list

வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களில் கலை, அறிவியல், அரசியல், ஊடகம், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துறைசார் வல்லுநராகவும், சாதனையாளராகவும் விளங்கி தமிழ்ச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தமிழர்களை பாராட்டி இந்த முன்னோடி விருது வழங்கப்படுகின்றது.

விருதாளர்களுக்கு பேரவையின் பாராட்டுகளை அறிவித்து சிறப்பு செய்வதுடன், வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டிகளை அடையாளப்படுத்தவும் துறைசார் வல்லுநர்களாக இயங்கிவரும் தமிழர்களிடையே முறையான ஒரு தொடர்பு வட்டத்தை உருவாக்குவதும் தமிழ் இளைஞர்கள் தங்களை சாதனையாளர்களாக வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கவும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.

2014 ஆம் ஆண்டு மிசோரி, 2015 கலிபோர்னியா, 2016 நியூ செர்சியில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் பல சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எதிர்வரும் 1, 2 சூலை 2017 மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மினியாபோலிசில் நடைபெற உள்ள பேரவையின் 30-ஆம் ஆண்டு தமிழ் விழா - 2017 நிகழ்வில் பின் வரும் அமெரிக்கா வாழ் முன்னோடித் தமிழர்களுக்கு "அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதை" வழங்குவதில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெருமை கொள்கின்றது.

அரசியல் துறையில் சிறந்து விளங்கும் இராசா கிருசுணமூர்த்தி, இலினாயி மாநில கீழவை உறுப்பினர் (சனநாயகக் கட்சி), இசைத்துறையில் சிறந்து விளங்கும் கிளேரன்சு சே, இசையமைப்பாளர், ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் பழனி குமணன், தி வால் சுட்ரிட் செர்னல் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது என்று அமெரிக்கத் தமிழர் முன்னோடிகள் விருது - 2017 தேர்வுக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017, USA Tamil Leadership awardee list announced.
Please Wait while comments are loading...