For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மன்விங்ஸ் விமானத்தை மலையில் மோத பயிற்சி எடுத்த துணை விமானி: பகீர் தகவல்

By Siva
Google Oneindia Tamil News

பெர்லின்: ஆல்ப்ஸ் மலை மீது விமானத்தை மோதிய ஜெர்மன்விங்ஸ் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்க பயிற்சி எடுத்துள்ளார்.

ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற ஜெர்மன் விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் விமானத்தில் இருந்த லுபிட்ஸ் உள்பட 150 பேர் பலியாகினர்.

இந்நிலையில் விபத்து குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

லுபிட்ஸ்

லுபிட்ஸ்

சம்பவத்தன்று அதாவது மார்ச் 24ம் தேதி ஜெர்மனியின் டுசல்டார்ப் நகரில் இருந்து ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தில் ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ் இருந்துள்ளார். அந்த விமானம் ஜெர்மனி திரும்பும்போது தான் அதை விபத்துக்குள்ளாக்கினார்.

பயிற்சி

பயிற்சி

ஜெர்மனியில் இருந்து ஸ்பெயினுக்கு செல்கையில் விமானத்தை அனுமதி பெறாமல் லுபிட்ஸ் உயரத்தில் இருந்து மிகவும் கீழே இறக்கியுள்ளார். லுபிட்ஸ் விமானத்தை மலை மீது மோத பயிற்சி எடுத்தது தெரியாமல் இருந்துள்ளனர் பயணிகள்.

கேப்டன்

கேப்டன்

கேப்டன் விமானி அறையில் இருந்து வெளியே சென்ற நேரத்தில் தான் லுபிட்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்க பயிற்சி பெற்றுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

5 நிமிடங்கள்

5 நிமிடங்கள்

கேப்டன் விமானி அறையில் இருந்து சென்ற 30 விநாடிகள் கழித்து லுபிட்ஸ் விமானத்தின் உயரத்தை அதிகரிப்பதும் குறைப்பதுமாக இருந்துள்ளார். அவர் இவ்வாறு தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்துள்ளார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

5 நிமிடத்தில் லுபிட்ஸ் என்னவெல்லாம் செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.

07:19:59 - கேப்டன் விமானி அறையை விட்டு வெளியேறும் சப்தம் கேட்கிறது
07:20:29 - விமானத்தை 35 ஆயிரம் அடிக்கு கீழே கொண்டு வருமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது
07:20:50 - லுபிட்ஸ் விமானத்தை 100 அடி வரை கீழே கொண்டு வந்து பின்னர் 49 ஆயிரம் அடிக்கு மேலே கொண்டு சென்று பிறகு 35 ஆயிரம் அடிக்கு கொண்டு வந்துள்ளார்
07:21:10 - விமானத்தை 21 ஆயிரம் அடிக்கு கொண்டு வருமாறு கூறப்பட்டுள்ளது
07:22:27 - லுபிட்ஸ் விமானத்தை பலமுறை 100 அடிக்கு கொண்டு வந்துள்ளார்
07:24:29 - கேப்டன் விமானி அறைக்குள் நுழையும் சப்தம் கேட்கிறது

English summary
According to the preliminary investigation, Germanwings co-pilot Lubitz practised crash on the same day while going from Germany to Spain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X