For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 கோழிப்பண்ணை தொழிலாளிகள் பாகிஸ்தானில் சுட்டுப் படுகொலை!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கோழிப்பண்ணைக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 9 பேர் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் லெஸ்பெலா மாவட்டத்தில் உள்ள அப்பாஸ்கோத் பகுதியில் கோழிப் பண்ணைகள் உள்ளன.

அங்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிகின்றனர்.

தொழிலாளர்கள் கடத்தல்:

இந்த நிலையில் அங்குள்ள ஒரு கோழிப் பண்ணைக்குள் நேற்று துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 9 பேரை மலைப் பகுதிக்கு கடத்தி சென்றனர்.

9 பேர் பரிதாப பலி:

பின்னர் அவர்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து 9 பேரும் உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாகாண ஊழியர்கள்:

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான், முஷாபர், பகவல்பூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்தவர்கள்.

பலுசிஸ்தான் அரசு கண்டனம்:

இந்த கொடூர சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இக்கொலைக்கு பலுசிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களை சுட்டுக் கொன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Suspected separatist insurgents in southwest Pakistan have killed nine labourers in what appeared to be an ethnically motivated attack, officials say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X