For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

176 பேரின் உயிர்.. பூனையை பிடிக்க போய் புலியிடம் மாட்டிய ஈரான்.. மொத்தமாக ஒன்று சேர்ந்த உலக நாடுகள்!

ஈரானில் உக்ரைன் நாட்டு விமானம் விழுந்து நொறுங்கி 176 பேர் பலியானது, ஈரானுக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நில நடுக்கம் ஏன் ஏற்பட்டது ? | Iran's earthquake happened maybe because of Atom Bomb test

    டெஹ்ரான்: ஈரானில் உக்ரைன் நாட்டு விமானம் விழுந்து நொறுங்கி 176 பேர் பலியானது, ஈரானுக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதை பல உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்க உள்ளது.

    ஈரானில் நடந்த விமான விபத்து தற்போது உலகம் முழுக்க பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், உக்ரைன், கனடா ஆகிய நாடுகள் இதில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்காவுடன் ஏற்பட உள்ள போரை விட ஈரானுக்கு இதுதான் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

    ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இரண்டு நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளானது. டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது.

     வேகமாக சென்று தாக்கிய ஈரான் ஏவுகணை.. நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்.. அதிர வைக்கும் வீடியோ! வேகமாக சென்று தாக்கிய ஈரான் ஏவுகணை.. நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்.. அதிர வைக்கும் வீடியோ!

    விமானம் விபத்து

    விமானம் விபத்து

    இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும். விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று புகார் எழுந்துள்ளது.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    ஈரானில் உக்ரைன் விமானம் எப்படி விழுந்து நொறுங்கியது குறித்து பல நாடுகள் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளது. இது தொடர்பாக முதலில் உக்ரைன் நாடுதான் சந்தேகம் தெரிவித்தது. உக்ரைன் அதிபர் இது தொடர்பாக மிகவும் கோபமான கருத்துக்களை வெளியிட்டார். அடுத்து உக்ரைனை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இதே சந்தேகத்தை எழுப்பியது.

    அதிபர் டிரம்ப்

    அதிபர் டிரம்ப்

    நேற்று அமெரிக்கா அதிபர் டிரம்பும் இதை பற்றி தனது சந்தேகத்தை வெளியிட்டார். இந்த நிலையில்தான் தற்போது இந்த விமான விபத்து தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஈரானில் விழுந்து விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலால்தான் ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது என்று இதில் புலனாகிறது.

    கனடா

    கனடா

    இன்னொரு பக்கம் இந்த விபத்து குறித்து கனடா அரசு விசாரணை நடத்தி வருகிறது. கனடாவின் வல்லுனர்கள் குழு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதைதான் குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கு இதில் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார்.

    ஐநா எப்படி

    ஐநா எப்படி

    இன்னொரு பக்கம் ஐநாவில் உக்ரைன் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐநாவில் புகார் அளிக்க உள்ளார். விமான விபத்து தொடர்பாக பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க உள்ளார்.

    மோசம்

    மோசம்

    ஒருவேளை ஈரான் தாக்கித்தான் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது என்பது மட்டும் புலன் ஆனால் ஈரான் பெரிய சிக்கலுக்கு உள்ளாகும், ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை சந்தித்து வரும் ஈரான், இந்த விஷயம் உண்மையானால் இன்னும் பல தடைகளை சந்திக்க நேரிடும்.

    ஈரான் சிக்கல்

    ஈரான் சிக்கல்

    ஈரானுக்கு இந்த விசாரணை மற்றும் புகார்கள் எல்லாம் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அமெரிக்க வீரர்களை தாக்க போய் அப்பாவி மக்களை, அதுவும் 176 பேரை ஈரான் கொன்றுவிட்டது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. ஈரான் இதை ஒரு பக்கம் மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Iran will face lot of issues if the Ukraine plane accident was an attack by a missile.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X