For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் போர்விமானத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்!

By Mathi
Google Oneindia Tamil News

ராக்கா: சிரியாவில் தங்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா தலையிலான நேசநாடுகளின் போர் விமானத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சிரியா, ஈராக்கின் பல நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இணைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.

ISIS shot down warplane in eastern Syria, pilot from Jordan held: monitor

இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள ராக்கா நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதற்காக போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

இத்தகவலை லண்டனிலுள்ள மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த விமானத்தை இயக்கிய ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த விமானியையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறைபிடித்தும் இருக்கின்றனர். அவரது நிலைமை என்ன என்பது தெரியவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களில் ஜோர்டானும் ஒன்று எனதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Islamic State of Iraq and Syria (ISIS) fighters have shot down a warplane on Wednesday believed to be from the US-led coalition over Syria, and have captured its pilot, activists said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X