சிப்ஸ் டப்பாவுக்குள் சீறும் பாம்பு.. சிக்கிய இளைஞர்.. அமெரிக்காவில் கலகல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலிஃபோர்னியா: ஹாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் கலிஃபோர்னியாவில் இருந்து வந்த பார்சலை சோதனை மேற்கொண்டதில் அதில் இருந்து 3 ராஜநாகங்கள் பிடிபட்டன.

ஹாங்காங்கில் இருந்து கடந்த 25-ஆம் தேதி கலிஃபோர்னியாவுக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதை சுங்க வரி துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

King Cobra found in Potato chips

அப்போது அந்த பார்சலில் இருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் டின்னை சோதனை செய்தனர். அந்த டின்னில் 3 ராஜநாகங்கள் அடைக்கப்பட்டு கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

முதலில் பாம்புகளை எடுத்துவிட்டு டர்டிலை அதிகாரிகள் பார்சலை பெற இருந்த ரோட்ரிகோ பிரான்கோ (34) என்பவருக்கு அனுப்பினர். இதைத் தொடர்ந்து வீட்டை சோதனை இடுவதற்கான ஒப்புதலை பெற்று அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களான முதலை, அலிகேட்டர், ஆமை, டெர்ராபின் உள்ளிட்டவை ஒரு தொட்டியில் இருந்தன. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் இதுபோன்று பார்சலில் கடத்திய 20 ராஜநாகங்கள் இறந்து கிடந்ததாக தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A man was arrested in California, USA, on July 25, after customs agents intercepted a package containing three live king cobras stuffed inside cans of potato chips.
Please Wait while comments are loading...