For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தின் "முதல் பிரஜை" ஆவாரா ஆலிஸ்ஸா...!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரக கனவு யாருக்குத்தான் இருக்காது. அத்தனை கண்களும் செவ்வாயின் செம்மையை நோக்கியே காத்திருக்கின்றன.. நம்முடைய நாளும் வருமா என்ற ஆர்வத்தில். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஆலிஸ்ஸா கார்சன்.

இந்த சின்னப் பொண்ணு.. ஆமாங்க வயது 13தான்... செவ்வாய் கிரகத்திற்குப் போக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

நான்தான் செவ்வாய் கிரகத்தில் முதல் ஆளாக காலடி எடுத்து வைப்பேன் என்றும் திடமான நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆலிஸ்ஸா.

நாசா சும்மா இருக்குமா

நாசா சும்மா இருக்குமா

சின்னப் பொண்ணு, அதுவும் அமெரிக்கப் பொண்ணு ஆசைப்பட்டுருச்சே.. நாசாவால் சும்மா இருக்க முடியுமா.. இதோ ஆலிஸ்ஸாவுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆலிஸ்ஸாவின் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் என்று இப்போது நாசாவும் நம்பிக்கையுன் கூறி வருகிறது.

அறிவியல் மாணவி

அறிவியல் மாணவி

ஆலிஸ்ஸா அறிவியல் மாணவி ஆவார். பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்த ஆச்சரியமான சிறுமியும் கூட.

நாசாவின் உலக விண்வெளி முகாம்களில் பங்கேற்பு

நாசாவின் உலக விண்வெளி முகாம்களில் பங்கேற்பு

நாசா நடத்திய 3 உலக விண்வெளி முகாமிலும் தவறாமல் பங்கேற்று, அதைச் செய்த முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றவர் ஆலிஸ்ஸா.

ப்ளூபெர்ரி பாப்பா

ப்ளூபெர்ரி பாப்பா

ஆலிஸ்ஸாவை, நாசாவில் செல்லமாக ப்ளூபெர்ரி என்றுதான் கூப்பிடுகிறார்கள். நாசாவின் செல்லக் குழந்தையாக மாறி விட்டார் ஆலிஸ்ஸா.

லூசியானாவிலிருந்து

லூசியானாவிலிருந்து

லூசியானாவின் பாடன் ரோஜ் பகுதியைச் சேர்ந்த ஆலிஸ்ஸா, எனது பயணம் நிச்சயம் வெற்றி பெறும். தோல்வி என்ற வார்த்தையையே நான் வெறுக்கிறேன் என்றார்.

20 வருஷ வேலை இருக்கு

20 வருஷ வேலை இருக்கு

ஆலிஸ்ஸாவின் தந்தையோ இன்னும் 20 வருடத்தில் எனது மகள் செவ்வாய்க்குச் செல்லலாம். அதற்காக நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது என்கிறார் புன்னகையுடன். மகள் செவ்வாய்க்குப் போகும் கனவை இவர் நனவாக்க அவ்வளவு மெனக்கெடுகிறாராம்.

இப்படி ஒரு அப்பா இருந்தால் எந்த மகளுக்குத்தான் சாதிக்க ஆசை வராது...!

English summary
Alyssa Carson has big dreams. At the age of 13 she is determined to be the first person to land on Mars. But this is more than wishful thinking - Nasa thinks she stands a chance and she is already in training. The teenager from Baton Rouge, Louisiana, says failure is not an option. And her father says he has the next 20 years of work planned out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X