வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னங்க இது? ஏலியன் உண்மையிலேயே வந்துருக்குமோ! செவ்வாயில் கண்டறியப்பட்ட விண்கலம்? அதிர்ச்சியில் நாசா

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : நாசாவின் ஆய்வு ஹெலிகாப்டரான இன்ஜெனிட்டி கடந்த ஏப்ரல் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வு நடத்தி வரும் நிலையில், ஏலியன்கள் பயன்படுத்திய விண்கலம் போன்ற ஒரு மர்ம பொருளின் புகைப்படங்களை அனுப்பியதாக நாசா வெளியிட்டுள்ளது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஆறுகளும் ஏரிகளும் நிறைந்ததாக இருந்த செவ்வாயில் நுண்ணுயிரிகளும் பல்கிப் பெருகியிருந்தன என கருதப்படுகிறது.

செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அதற்கான சுவடுகள் அங்கு எஞ்சியுள்ளனவா, எதிர்காலத்தில் உயிரினங்களை அங்கு குடியேறச் செய்யும் சாத்தியங்கள் உள்ளனவா என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

நாசாவின் படத்தில் 'கடவுளின் கை' - விண்வெளி அதிசயத்தின் உண்மை என்ன? #factcheckநாசாவின் படத்தில் 'கடவுளின் கை' - விண்வெளி அதிசயத்தின் உண்மை என்ன? #factcheck

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்


இந்நிலையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கிய நாசாவின் விண்கலத்தின் ஒரு பகுதியாக அனுப்பிவைக்கப்பட்ட இன்ஜெனிட்டி இதுவரை பல முறை செவ்வாய் கிரகத்தின் மீது பறந்து ஆய்வு நடத்தி படம்பிடித்திருக்கிறது. இந்நிலையில் அது அனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்த போது நாசா விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

ஏலியன்களின் பறக்கும் தட்டு

ஏலியன்களின் பறக்கும் தட்டு

காரணம் அங்கு ஏற்கனவே விண்கலம் அல்லது பறக்கும் தட்டு போன்ற பொருள் இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். Perseverance roverஇன் ரோபோடிக் கேமராவால் படம்பிடித்து அனுப்பப்பட்ட சமீபத்திய படங்கள் பறக்கும் தட்டு அல்லது அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் (UFO) என அழைக்கப்படும் பகுதிகள் சில தரையில் உடைந்து இருப்பதை காட்டியது. சிவப்பு மணலின் மேற்பரப்பில் சிதறிய விண்வெளி கலம் போன்ற ஒன்றின் சிதைந்த பாகங்களின் புகைப்படங்கள் இணைய தளத்தில் வேகமாக பரவி, நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நெட்டிசன்கள் கேள்வி

நெட்டிசன்கள் கேள்வி

வெள்ளை நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் அது இருந்ததால், அது ஏலியன்கள் வந்து சென்ற பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும், பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் அனுப்புவது போல வேறு ஏதாவது ஒரு கிரகத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏலியன்கள் இதுபோன்ற விண்கலங்களை அனுப்பி இருக்கலாம் எனப் பல தகவல்கள் இணையத்தில் உலாவின. இதையடுத்து நாசாவிடம் கேள்வி கேட்டு இணையவாசிகள் நச்சரித்து வந்த நிலையில் அது என்ன என்பதன் மர்மத்தை நாசா விளக்கியுள்ளது.

Recommended Video

    நிலவில் ஆய்வு செய்ய திட்டம் போட்ட America.. பரபரப்பு தகவல் | Oneindia Tamil
    உண்மை என்ன?

    உண்மை என்ன?

    இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட உடைந்த பாகங்கள் உண்மையில் கடந்த ஆண்டு செவ்வாய்க்கு சென்ற ரோவரின் உடைந்த லேண்டிங் கியர்கள் என்பதை நாசா உறுதிபடுத்தியது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தால் (ஜேபிஎல்) புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அது நாசாவின் மார்ஸ் ப்ராஜக்டுக்காக செவ்வாய் கிரகத்தில் ரோவரை தரையிறக்க உதவிய பாராசூட் மற்றும் ரோவரைப் பாதுகாக்கும் "கூம்பு வடிவ பின் ஷெல்" ஆகிய பாராசூட் ஆகியவைதான் இப்படி இணையத்தில் வதந்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    NASA has released photos of a mysterious object such as a spacecraft used by aliens as it has been flying over the surface of Mars since last April.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X