எங்க மறுக்கா சொல்லு.. கலாய்த்த ரோகித் சர்மா, கிச்சு கிச்சு மூட்டிய ரிஷப் பந்த்! டாஸ் போடும்போது ஜாலி
சார்ஜா: ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடையே டாஸ் போடும்போது நடந்த கலாட்டா ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டது.
சார்ஜாவில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி வழக்கம்போல முதலில் டாஸ் போடப்பட்டது. அப்போது ரிஷப் பந்த், டெயில் என்று சொன்னார். பூதான் விழுந்தது. இதையடுத்து, வர்ணனையாளரிடம், நாங்கள் முதலில் பவுலிங் செய்ய உள்ளோம் என்பதை ஆங்கிலத்தில் We're going to bowl first என்று கூறினார்.

டாஸ் போடும்போது கலாட்டா
பவுல் என்பது ஹிந்தியில் உள்ள போல்.. என்ற வார்த்தையின் உச்சரிப்பை போன்றுதான் இருக்கும். அதுவும் ரிஷப் பந்த் கூறியது கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. மேலும், யாரை பந்து வீச ரிஷப் அழைக்கிறார் என்பதும் ரோகித்துக்கு சற்று குழப்பமாக இருந்தது. எனவே, ரோகித் ஷர்மா, உடனே ரிஷப் பந்த்தை பார்த்து, Can you போல்.. என்று தன்னை பார்த்து கையை காட்டினார். அதாவது, என்னிடத்தில் சொல்ல முடியுமா என்றார். உடனே சுதாரித்துக் கொண்டு புரிந்து கொண்ட ரிஷப் பந்த், We're going to bowl first.. என்று ரோகித்திடமும் கூறிவிட்டு அவரது இடுப்பில் கை வைத்து கிச்சு கிச்சு மூட்டியபடி நடந்து சென்றார். உடனே ரோகித் சர்மா, "ஐ லைக் திஸ்" என்று சிரித்தபடி கூறினார்.

ஜாலி, ஜாலி
ஐபிஎல் அணிகளுக்கு இடையே மைதானத்தில் மோதல் இருந்தாலும், இந்திய அணிக்காக விளையாடும் இவ்விரு வீரர்களும் ஜாலியாக டாஸ் போட்டு பேசிக் கொண்டிருந்ததை இரு அணி ரசிகர்களும் ரசிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

சார்ஜா மைதானம்
ரோகித் சர்மா டாஸ் வெற்றி பெற வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டிருப்பார் போலும். ஏனெனில், சார்ஜா மைதானம் ரொம்பவே ஸ்லோ பிட்ச். எனவே, இரண்டாவது பந்து வீசும்போது பந்து மெதுவாகத்தான் வரும். முதல் 10 ஓவர்கள் முடியும்போதே அப்படித்தான் ஆகிவிடும் வாய்ப்பு உள்ளதாம். எனவே 2வது பேட்டிங்கின்போது இன்னும் மெதுவாகத்தான் பந்து வரும்.
Recommended Video

ரோகித் பேட்டி
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், பேட்டிங் எடுப்பதா பவுலிங் எடுப்பதா என்று இரு மன எண்ணத்தில்தான் இருந்தேன். இங்கு முதலில் பேட் செய்த அணிகள் கூட சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளன. எனவே ஸ்கோரை அதிகரிப்பதுதான் முக்கியம். 2வது பவுலிங் செய்தாலும் பிரச்சினை இல்லை என்றார்.

மும்பை அணி
அதேநேரம், பேட்டிங்கின்போது ரோகித் சர்மா, டிகாக் உள்ளிட்ட இரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் விரைவாக ஆட்டமிழந்து விட்டனர். டெல்லி அணியின் ஆவேஸ்கான் சிறப்பாக பந்து வீசி ரோகித் விக்கெட்டை காலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications