For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது... 2 கேலக்சிகள் இணைவதை படம் பிடித்த ஹப்பிள்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: முதன்முறையாக நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, இரண்டு கேலக்சிகள் ஒன்றோடு ஒன்று இணையும் மிக அரிய நிகழ்வை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.

ஹப்பிள் தொலைநோக்கி 1990 ஏப்ரல் 24- ல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டது ஆகும். இது கடந்த 25 ஆண்டுகளாக விண்ணில் நிகழும் பல அற்புதங்களைக் குறித்த தகவல்களை நமக்கு தந்து வருகிறது. சமீபத்தில் கூட நட்சத்திர அழிவான, சூப்பர்நோவா காட்சிகளைப் புகைப்படமாக அது எடுத்து அனுப்பியது.

இந்நிலையில், தற்போது இரண்டு, கேலக்சிகள் எனப்படும் பால்வெளி மண்டலங்கள் ஒன்றோடு ஒன்று இணைவதைப் புகைப்படங்களாக அது பதிவு செய்துள்ளது.

230 மில்லியன் ஒளி ஆண்டுகள்...

230 மில்லியன் ஒளி ஆண்டுகள்...

இந்த நிகழ்வானது பூமியில் இருந்து சுமார் 230 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நடந்தது ஆகும்.

புதிய கேலக்சி...

புதிய கேலக்சி...

முதலில் இந்தப் புகைப்படங்களைப் பார்த்த விஞ்ஞானிகள், அது சரியான உருவமில்லாத கேலக்சி என நினைத்தனர். பின்னர் தான் ஆய்வில் அது இரண்டு கேலக்சிகள் இணையும் தருணம் என்பது தெரிய வந்தது. இதன் மூலம் புதிய கேலக்சி ஒன்று உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் புதிய கேலக்சிக்கு விஞ்ஞானிகள் என்.ஜி.சி. 6052 எனப் பெயரிட்டுள்ளனர்.

ஈர்ப்பு விசை காரணமாக...

ஈர்ப்பு விசை காரணமாக...

இது தொடர்பாக நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், முதலில் இந்த இரண்டு கேலக்சிகளும் தனித்தனியாக இயங்கி வந்துள்ளன. பின்னர் ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று ஈர்த்து, ஒன்றாக இணைந்துள்ளன. இதன் மூலம் விண்மீன்களின் வட்டப்பாதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர்.

தனிப்பட்ட பண்புகள்...

தனிப்பட்ட பண்புகள்...

மேலும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டு நடவடிக்கைகளுக்குப் பின் தற்போது நடந்துள்ளது. இரண்டு கேலக்சிகள் இணைந்ததன் மூலம் உருவாகியுள்ள இந்தப் புதிய கேலக்சியானது தனக்கென தனிப்பட்ட உருவம், பண்புகளைப் பெற்றிருக்கும். அதன் பெற்றோரான அந்த இரண்டு கேலக்சிகளைப் போன்று இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
For the first time ever, NASA’s iconic Hubble telescope has captured merging of two galaxies nearly 230 million light-years away from the Earth, in the constellation of Hercules. The stunning image was acquired using the Wide Field Planetary Camera 2 aboard NASA/ ESA Hubble Space Telescope.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X