பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் ஒருவரை கொன்றுள்ளார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி
AFP
பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி

பின்னர், பாரீஸின் ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர் ஒருவர்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழு தெரிவித்துள்ளது.

பாரீஸில் கேளிக்கை மற்றும் இரவு வாழ்க்கைக்கு பெயர் போன ஒரு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி
AFP
பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி

இந்த சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கஃபே மற்றும் உணவு விடுதிகளுக்குள் நுழைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி ட்விட்டர் பதிவு வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், '' இன்று மீண்டும் பிரான்ஸ் தனது மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளது. ஆனால், நமது எதிரிகளிடம் ஒரு இஞ்ச்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
A knifeman has killed one person and wounded four in a suspected terror attack in central Paris, French officials say.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற