For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெஷாவர் விரைந்தார் நவாஸ் ஷெரீப் - தலிபான் தாக்குதலுக்கு பாக். தலைவர்கள் கண்டனம்

Google Oneindia Tamil News

பெஷாவர்: பாகிஸ்தான் பள்ளியில் புகுந்து தலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலிபான்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நேரில் பார்வையிட பெஷாவர் சென்றுள்ளார் நவாஸ் ஷெரீப்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இன்று வழக்கம்போல் பள்ளி நடைபெறத் துவங்கியதும், ராணுவ உடையில் இருந்த 7 தீவிரவாதிகள் திடீரென உள்ளே புகுந்துள்ளனர்.

PM reaches Peshawar

முதலில் பள்ளி வாகனத்துக்கு தீ வைத்த மாணவர்கள், பின்னர் அங்கிருந்த மாணவர்கள் உட்பட அனைவர் மீதும் துப்பாக்குச் சூடு நடத்தினர். இதில், 82 குழந்தைகள் உட்பட 120க்கும் அதிகமானோர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 500க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இத்தாக்குதல் சம்பவத்தால் பெஷாவர் நகரமே போர்க்களம் போலக் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் உடனடியாக பெஷாவர் விரைந்தார். முன்னதாக தலிபான்களின் தாக்குதல் குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘தலிபான்கள் தாக்குதலில் இறந்தது என் குழந்தைகளே..இது என்னுடைய இழப்புதான்.. பெஷாவரில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மேற்பார்வையிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், இத்தாக்குதல் சம்பவத்திற்கு இம்ரான்கான் உள்பட பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

English summary
Prime Minister Nawaz Sharif has reached Peshawar to oversee the operation underway against terrorists in the army-run school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X