Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டைவிட்டு தப்பி ஓடிய விக்டர் யனுகோவிச்சை உக்ரைன் அதிபராக பிரகடனப்படுத்தும் ரஷ்யா?

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைனைவிட்டு தப்பி ஓடிய மாஜி அதிபர் விக்டர் யனுகோவிச்சை புதிய அதிபராக பிரகடனப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Russia அடுத்த கட்டம்? Ukraine-னின் புதிய அதிபராக Victor Yanukovych ? | Oneindia Tamil

    சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். 2014-ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அடியாள் நாடாகவே உக்ரைன் இருந்தது.

    ரஷ்யாவுக்கு கட்டுப்பட்டு நடக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாக உக்ரைன் இருந்தது. ஆனால் உக்ரைன் தேசிய இன எழுச்சியானது 2014-ல் உக்ரைன் புரட்சியாக வெடித்தது. அப்போது ரஷ்யா ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். இதனால் உக்ரைனைவிட்டு அவர் தப்பி ஓடினார். முதலில் ரஷ்யாவில் பதுங்கி இருந்த விக்டர் யனுகோவித் தற்போது பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போதுதான் உக்ரைனின் கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது.

    பிரச்சனை என்ன?

    பிரச்சனை என்ன?

    ரஷ்யாவின் பிடியில் இருந்து விலகிய உக்ரைன் மெல்ல மெல்ல அமெரிக்கா சார்பு நாடாக உருமாறியது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணையவும் உக்ரைன் முடிவெடுத்தது. உக்ரைன் தமது பிடியில் இருந்து விலகுவதை ரஷ்யா துளியும் விரும்பவில்லை. இதனால் உக்ரைனில் ரஷ்ய தேசிய இன போராளிக் குழுக்களின் ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிட்டது ரஷ்யா.

    உக்ரைன் மீது யுத்தம்

    உக்ரைன் மீது யுத்தம்

    இது தொடர்பாக 2014, 2015-ம் ஆண்டுகளில் மின்ஸ்க் நகரில் 2 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின்படி ரஷ்யா தேசிய இனத்தவரின் 2 மாகாணங்களுக்கு உக்ரைன் சுயாட்சி வழங்க வேண்டும். அப்படி சுயாட்சி வழங்கப்பட்டால் கிரீமியா போல ரஷ்யாவுடன் அவை இணைந்துவிடும் என அச்சப்பட்டது உக்ரைன். இப்போது அமெரிக்கா ஆதரவு, ரஷ்யா தேசிய இனக்குழுவினருக்கு அதிகாரப் பரவல் ஆகிய காரணங்களை முன்வைத்து உக்ரைன் மீது யுத்தத்தை நடத்தி வருகிறது ரஷ்யா.

    இருதரப்பிலும் பேரிழப்பு

    இருதரப்பிலும் பேரிழப்பு

    கடந்த ஒரு வார காலமாக நடந்து வரும் யுத்தத்தில் உக்ரைன், ரஷ்யா இருதரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை அடுத்தடுத்து ரஷ்யா கைப்பற்றி வருகிறது. உக்ரைன் எதிர்பார்த்தபடி நேட்டோ படைகளும் உதவிக்கு வரவில்லை. இந்த நிலையில் மின்ஸ்க் நகரில் உக்ரைன்- ரஷ்யா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    ரஷ்யாவின் திட்டம் என்ன?

    ரஷ்யாவின் திட்டம் என்ன?

    உக்ரைனில் தற்போதைய அதிபரும் அமெரிக்கா ஆதரவாளருமான விளாதிமீர் ஜெலன்ஸ்கியை பதவியில் இருந்து நீக்குவதுதான் ரஷ்யாவின் முக்கிய திட்டம். ஜெலன்ஸ்கியை தூக்கி அடித்துவிட்டு மாஜி அதிபர் விக்டர் யனுகோவிச் புதிய அதிபர் என பிரகடனம் செய்யவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது. வொலடிமிர் ஜெலன்ஸ்கி இதற்கு ஒப்புக் கொள்ளாதவரை உக்ரைஜ் மீதான ரஷ்யாவின் யுத்தம் நீடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+