For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வியட்நாமில் கரை ஒதுங்கிய விமான பாகம்: மாயமான மலேசிய விமானத்தினுடையதா?

By Siva
Google Oneindia Tamil News

ஹோசி மின் சிட்டி: வியட்நாமில் விமானம் ஒன்றின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது. அந்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வியட்நாமில் உள்ள கான்ஹ் ஹோவா மாகாணம் வான் நின் மாவட்டத்தில் உள்ள தாய் லான்ஹ் கம்யூனில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியதை லீ டான் பின்ஹ்(41)என்ற மீனவர் பார்த்துள்ளார். அலுமினியத்தால் ஆன அந்த பாகம் 3.1 மீட்டர் நீளமும் 100 கிலோ எடையும் கொண்டது.

விமான பாகத்தை கடந்த 11ம் தேதியே பார்த்தும் லீ உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை.

அதிகாரிகள்

அதிகாரிகள்

புதன்கிழமை சில புகைப்படக் கலைஞர்கள் தாய் லின்ஹிற்கு வந்தபோது விமான பாகம் குறித்து அறிந்து உள்ளூர் மீடியாக்களுக்கு தகவல் அளித்தனர்.

வியட்நாம்

வியட்நாம்

239 பேருடன் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் மாயமான அன்று இரவு வியட்நாமில் அது எரிந்து கடலில் விழுந்ததை பார்த்ததாக எண்ணெய் கிணறில் பணியாற்றிய மைக் மெக்கே என்பவர் தெரிவித்தார்.

நான் பார்த்தேன்

நான் பார்த்தேன்

மலேசிய விமானம் மாயமான சில மணிநேரத்தில் வியட்நாமில் விமானம் ஒன்று எரிந்து கடலில் விழுந்தது. அதனால் அது மாயமான மலேசிய விமானம் தான் என வியட்நாமில் உள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் பணியாற்றிய மைக் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பினார்.

பணி நீக்கம்

பணி நீக்கம்

எரிந்து கடலில் விழுந்தது மாயமான மலேசிய விமானம் என்று கூறிய மைக்கின் இமெயில் விபரங்கள் வெளியான பிறகு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தவறான இடம்

தவறான இடம்

30 ஆண்டுகளாக எண்ணெய் கிணற்றில் பணியாற்றிய அவர் 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இரவு தான் பார்த்தது மலேசிய விமானம் என்று இன்றும் நம்புகிறார். அதிகாரிகள் தவறான இடத்தில் தேடுவதால் தான் விமான பாகம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார் மைக்.

விமான பாகம்

விமான பாகம்

மாயமான மலேசிய விமானம் வியட்நாம் அருகே கடலில் விழுந்ததாக மைக் கூறி வரும் நிலையில் அங்கு விமான பாகம் ஒன்று கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

English summary
Vietnamese authorities have started examining suspected plane debris, the media reported on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X