For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல் அதிபர் வேட்பாளர்கள் விவாதம்: வழக்கம் போல் வாயாடிய ட்ரம்ப்... அசத்திய ஹிலரி

By Shankar
Google Oneindia Tamil News

நியூயார்க்(யு.எஸ்): 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முதல் வேட்பாளர்கள் விவாதம் நியூயார்க்கில் நடைபெற்றது. ஹிலரி வெற்றி பெற்றதாகக் கூறப்படும் இந்த விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில் பேசி கலகலப்பூட்டினார்.

அதிரடியாக ஆரம்பித்த ட்ரம்ப்

அதிரடியாக ஆரம்பித்த ட்ரம்ப்

தொடக்கத்தில் அமெரிக்காவிலிருந்து வேலைகள் ஏன் வெளிநாடுகளுக்கு போனது,

அரசியல்வாதிகள் செயலற்றுப் போய்விட்டார்கள், சிவப்பு நாடா சட்டங்கள் நிறுவனங்களுக்கு எதிரானவை, அதிகப்படியான வரி விதிப்பினால் வெளி நாடுகளுக்கு சென்று விட்டனர், பின்னர் எப்படி வேலைவாய்ப்புகள் பெருகும் என்றெல்லாம் சீரியசாக விவாதத்தை ஆரம்பித்தார்.

அட, ட்ரம்பின் போக்கில் மாற்றம் தெரிகிறதே, ஹிலரிக்கு கடும் சவால் கொடுப்பார் போலிருக்கிறதே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்தடுத்து, சரியான புள்ளி விவரங்களுடன் ஹிலரியை மறுத்துப் பேசாமல், எனக்கு எல்லாம் தெரியும் என்ற ரீதியிலேயே பதில் அளிக்க ஆரம்பித்து விட்டார்.

நிதானத்துடன் ஹிலரி

நிதானத்துடன் ஹிலரி

பொருளாதாரம், வேலைவாய்ப்பு, நிறுவனங்கள் வெளிநாடு இடம்பெயர்தல் உள்ளிட்டவைகளை ட்ரம்ப், ஆவேசத்துடன் பேசி அரசியல்வாதிகளை குற்றம் சாட்டும் போது ஹிலரி சற்று திணறித்தான் போய்விட்டார்.

இப்போது யோசிக்கும் ஹிலரி 30 வருடமாக என்ன செய்தார் என்றெல்லாம் ட்ரம்ப் பொது மக்களின் தூதுவன் போலப் பேசியபோது, பில் க்ளிண்டன் ஆட்சியில் எல்லாம் சிறப்பாக இருந்தது வேலை வாய்ப்பு பெருகியது என்று பதில் தாக்குதலை ஹிலரி ஆரம்பித்தார். ஆனாலும் அணுகுமுறையில் தேர்ந்த அரசியல்வாதியின் நிதானத்தைக் கடைப்பிடித்தார்.

ஒபாமாவின் பிறப்பைப் பற்றி சர்ச்சை எழுப்பியே ட்ரம்ப் தனது இருப்பை அரசியலில்
தெரியப்படுத்திக் கொண்டார். ஆனால் நாட்டுக்கு பெரும் அவமானத்தைத் தேடித்தந்தார் என்று ஹிலரி குற்றம் சாட்டினார்.

ஒபாமாவின் பிறப்பு பற்றி ஹிலரி தான் அவரது உட்கட்சி தேர்தலில் முதலில் எழுப்பினார். அவரால் ஒபாமாவின் பிறப்புச் சான்றிதழை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. நான் அதில் வெற்றி பெற்றேன் என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

ட்ரம்பின் குற்றச்சாட்டை ஹிலரி மறுத்தார். தான் எப்போதும் ஒபாமாவின் அமெரிக்க பிறப்புக் குடியுரிமை மீது சந்தேகம் கொண்டதே கிடையாது. அவர் முஸ்லீம் என்றும் நான் நம்பியது இல்லை என்றார்.

வருமானவரி விவரங்களை சொல்லாத முதல் வேட்பாளர்

வருமானவரி விவரங்களை சொல்லாத முதல் வேட்பாளர்

கடந்த நாற்பது ஆண்டுகால வரலாற்றில், வருமான வரி விவரங்களை வெளியிடாத ஒரே அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தான். அவர் வருமான வரி கட்டவே இல்லை அதனால்தான் வெளியே சொல்லத் தயக்கம் போலிருக்கு. அல்லது அவர் சொல்வது போல் அப்படி ஒன்றும் பெரிய பணக்காரராக இல்லாமல் இருக்கலாம்.

அவரது நிறுவனங்களில் வேலை செய்த சிறு நிறுவனங்களுக்கு உரிய பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர் தானே ட்ரம்ப்.. அவருடைய நிறுவனங்களின் வெளி நாட்டுத் தொடர்பு யாருக்கும் தெரியாது. அவர் கொடுக்க வேண்டிய கடன்கள் எந்த நாட்டுக்கு என்றும் தெரியாது. அவரை நம்பி எப்படி அதிபர் பதவியை கொடுப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.

பெரிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதன் மூலம் ட்ரம்ப், அவருக்கு வசதியை ஏற்படுத்தி கொள்கிறார். மீண்டும் ஒரு பொருளாதார தேக்க நிலைக்கு அழைத்துச் சென்றுவிடுவார் என்றும் ஹிலரி எச்சரித்தார்.

ஈராக் போருக்கு ட்ரம்ப் ஆதரவா?

ஈராக் போருக்கு ஆதரவு தெரிவித்தார் ட்ரம்ப். ஆனால் இப்போது பல்டி அடித்து பேசுகிறார் என்றும் ஹிலரி குற்றம் சுமத்தினார். அதை மறுத்துப் பேசிய ட்ரம்ப், போருக்கு முன்னால் நான் எதிர்த்துதான் பேசினேன். போர் தொடங்கிய பிறகு அரசுக்கு ஆதரவாகப் பேசினேன் என்றார்.

மேலும் ஈராக்கில் படைகளை வாபஸ் வாங்காமல் இருந்திருந்தால் ஐஎஸ்ஐஎஸ் உருவாகி இருக்காது என்றும் கூறினார்.

படை வாபஸ் என்பது ஜார்ஷ் புஷ், ஈராக் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம். தனக்கோ, அதிபர் ஒபாமாவுக்கோ அதில் எந்த பங்கும் இல்லை என்று ஹிலரி மறுப்பு தெரிவித்தார்.

ஜப்பான், சவுதி அரேபியா நாடுகளிடம் எந்த பணமும் வாங்காமல் நமது ராணுவத்தைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கிறோம். அவர்களிடம் பணம் வாங்க வேண்டும் என்று ட்ரம்ப் சொன்னார்.

English summary
First US presidential candidates’ debate was held in New York. Hillary Clinton took a lead andconsidered victorious in the debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X