Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதய்பூர் டெய்லர் கொலை.. குற்றவாளிகளுடன் தொடர்பா? பாஜக விளக்கம் அளிக்க ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

உதய்பூர்: நுபுர் சர்மா கருத்தை ஆதரித்ததற்காக தையல் கடைக்காரரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுடன் பாஜக-வுக்கு தொடர்பு இருப்பதால் அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நுபுர் சர்மாவின் இந்த கருத்துக்கு இந்தியாவில் மட்டும் அல்லாது சர்வதேச அளவிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

 Udaipur Murder Accused link with BJP, Rajasthan CM Seeks clarification

இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற கருத்து தேசம் முழுவதையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கி விட்டது என்று உச்ச நீதிமன்றமும் கடுமையாக அவரை விமர்சித்தது. அதோடு அவரை மன்னிப்பு கோரவும் உத்தரவிட்டு இருந்தது.

நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாலாபுறமும் கண்டனங்கள் எழுந்ததால், அவரது கட்சி பொறுப்பை பாஜக பறித்தது. நுபுர் சர்மா மீது பல்வேறு இடங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்தி வந்த கன்னையா லால் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார்.

இதனால், ஆத்திரம் அடைந்த முகம்மது ரியாஸ் மற்றும் கவுஸ் முகம்மது என்ற இரு நபர்கள், கடந்த மாதம் 28-ந் தேதி கன்னையால் லால் கடைக்கு நேரடியாக சென்று அவரை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்தனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். அதோடு விட்டு விடாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்தது. இந்த கொடூர கொலைச்சம்பவம் தொடர்பாக முகம்மது ரியாஸ், கவுஸ் முகம்மது உள்பட 7 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நபர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரியாஸ் அக்தாரி என்பவர் பாஜக தலைவர்கள் சிலருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பாஜக சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கலந்து கொண்டுள்ளார். மேலும், பாஜக சிறுபான்மை அணி நிர்வாகி தாஹிருடன் நெருங்கிய தொடர்பிலும் அவர் இருந்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் எதிர்க்கட்சித்தலைவர் குலாப் சந்த் கடாரியாவுடன் ரியாஸ் அக்தாரி இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி மேலும் பரபரப்பை கிளறியிருந்தன.

இந்த சூழலில், கன்னையா லால் கொலை குற்றவாளிக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே இது குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அசோக் கெலாட் கூறுகையில், "உதய்பூர் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இருந்ததை கண்டறிந்துள்ளோம். கன்னையா லாலை கொலை செய்த நபர்கள் வாடகை செலுத்தாமல் இருந்ததாகவும் இதற்காக போலீஸ் நிலையத்தில் சென்று முறையிட்ட போது, பாஜகவினர் தன்னை தொடர்பு கொண்டு எங்கள் கட்சிக்காரரை தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் பாஜக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

.

ஆனால், உதய்பூர் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக எழும் குற்றச்சாட்டுக்களை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+