ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு! பிபிசி தலைமை அலுவலகம் முன் 'பாரத் மாதா கி ஜெய்' என இந்தியர்கள் முழக்கம்!
வெளிநாட்டு பிரச்னைகளில் பிபிசி ஏன் தலையிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
லண்டன்: குஜராத் கலவரம் குறித்து பிபிசி சமீபத்தில் 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள பிபிசி தலைமை அலுவலகத்திற்கு வெளியில் இந்தியாவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
குஜராத் கலவரம் 2002ம் ஆண்டு நடந்தது. அப்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்திருந்தார். இந்நிலையில் பிபிசியின் ஆவணப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என்றும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேபோல இந்நிறுவனங்கள் தங்கள் தளத்திலிருந்து இப்படத்தை நீக்கின. ஆனால், இந்த படம் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறையின் ஆவணங்களின்படிதான் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதனை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. மேலும், இவ்வாறு ஆவணப்படங்களை முடக்குவது என்பது கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை பொது வெளியில் திரையிட்டு வருகின்றன.

போராட்டம்
இந்நிலையில் இந்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள பிபிசி தலைமை அலுவலகம் முன்பு இந்தியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் 'பாராத் மாதாகி ஜெய்' என்றும், 'பிபிசிக்கு அவமானம்' என்றும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற வந்தனா ஷர்மா கூறுகையில், "பிரதமர் மோடிக்கு எதிராக பொய்யான தகவல்களை கொண்டு ஒரு பிரச்சாரத்தை பிபிசி நடத்தியுள்ளது. இந்த ஆவணப்படம் இந்தியாவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கம் எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் இருக்கிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றமே இது தொடர்பாக தீர்ப்பளித்துவிட்டது. ஆனால் இந்த ஆவணப்படத்தின் மூலம் அவர்கள் உச்சநீதிமன்றத்தையே கேள்வி கேட்க முயற்சிக்கிறார்கள். எனவேதான் நான் பிபிசிஐ புறக்கணிக்கிறேன். இந்த ஆவணப்பட சதிக்கு பின்னர் பல சக்திகள் இருக்கின்றன. அவர்களின் நோக்கம் 2024ம் ஆண்டு நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக விடாமல் தடுத்து நிறுத்துவதுதான். ஆனால் அது நடப்பதற்கான சாத்தியம் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது" என்று கூறியுள்ளார். அதேபோல ஐடி ஆலோசகரான 48 வயதான விஷ்வா சிங் கூறுகையில், "குஜராத் கலவரம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் சுமார் 10 ஆண்டுகளாக விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

காஷ்மீர்
இந்த குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடியை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து பிபிசி மோடியை தொடர்புபடுத்தியுள்ளது. வேறு ஒரு நாட்டின் விவகாரங்களில் தலையிட பிபிசிக்கு உரிமை கிடையாது. குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படத்தை இயக்கியுள்ள பிபிசி பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நடந்துக்கொண்ட விதம் குறித்து ஏன் ஆவணப்படத்தை தயாரிக்கவில்லை? பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்படுவது குறித்தும், காஷ்மீரை இந்திய வரைபடத்தில் இருந்து நீக்கியது குறித்தும் பிபிசி ஏன் ஆவணப்படத்தை எடுக்கவில்லை" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

கைது
அதேபோல, "இந்தியாவையும், இந்துக்களையும் அவமதிப்பதுதான் பிபிசியின் திட்டம். அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மட்டுமல்லாது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை பிபிசி குழுவினர் ஏன் சென்று சந்திக்கவில்லை?" என்றும் போராட்டக்காரர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். முன்னதாக இந்த ஆவணப்படத்தை ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திரையிட்டபோது அம்மாணவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக்தில் SFI மாணவர் சங்கத்தினர் ஆவணப்படத்தை திரையிட முயன்றபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களில் சிலர் கைதும் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications