மதுரையை ஜாலியா சுற்றிய காவ்யா.. மன்னித்து சேர்த்துக்கிட்ட கணவன்.. நம்ப முடியாத காரியத்தை செய்த மனைவி
மதுரை: மதுரை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அதிமுக நிர்வாகி ஒருவரை, அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கள்ளக்காதல் பயங்கரங்கள் தொடர்ந்து வருவது பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.. என்ன நடந்தது மதுரையில்?
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்..

மதுரை அஇஅதிமுக செந்தில் குமார்
இவர் தன்னுடைய ஊரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
காவியாவிற்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டார்கள்..
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சமரசம் செய்து காவியாவை மீண்டும் செந்தில்குமாருடன் சேர்த்து வைத்தனர்... ஆனாலும் காவியா தனது தொடர்பை கைவிடாமல் கார்த்திக்கிடம் செல்போனில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.. அத்துடன் வீட்டிலிருந்த பணத்தையும் கள்ளக்காதலனுக்கு தந்து வந்துள்ளார்.. மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
கள்ளக்காதல் காவ்யா
இந்த விஷயம் தெரிந்த செந்தில்குமார் தனது மனைவியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் மீண்டும் கோபித்துக்கொண்டு அவனியாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார் காவியா.. இதனால் மனம் நொந்த பெற்றோர், கணவருடன் சேர்ந்து வாழுமாறு காவ்யாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எங்கே திரும்பினாலும் அட்வைஸ் சத்தமாகவே உள்ளதால் கடுப்பான காவியா தனது அப்பா மீதே போலீஸில் புகார் தந்துவிட்டார்.. இந்த புகாரை கண்டு திடுக்கிட்ட போலீசார், காவ்யாவை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
தங்கள் காதலுக்கு மொத்த பேரும் எதிரியாக இருப்பதால் ஆத்திரமடைந்தார் காவ்யா.. கணவர் உயிரோடு இருந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்றும் கார்த்திக்கிடம் சொல்லி உள்ளார்.. இதையடுத்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட கார்த்திக், சம்பவத்தன்று தனது நண்பர்கள் 6 பேருடன் ஆட்டோ, பைக்குகளில் சாமநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார்.
விடிய விடிய காத்திருந்த கும்பல்
நேற்று முன்தினம் இரவு முழுவதும் டீக்கடை அருகிலேயே தண்ணி அடித்துவிட்டு செந்தில்குமாருக்காக விடிய விடிய காத்திருந்தது அந்த கும்பல்.. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டீ கடையை திறக்க வந்தார் செந்தில்குமார்.. அப்போது அவரை வழிமறித்த கும்பல், அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டியது.
இதில் அவரது கை துண்டிக்கப்பட்டதுடன், முகமும் சிதைக்கப்பட்டது.. இறுதியில் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் கொடூரமாக விழுந்து இறந்தார்..
காவ்யாவின் சதித்திட்டம்
இந்த சம்பவம் குறித்து எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காவியாவின் சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனிடையே கள்ளக்காதலன் கார்த்திக் உட்பட 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மதுரையில் அரங்கேறிய இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!!
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications