மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெய்டில் உள்நோக்கமா..? “சூரி என் தொகுதிக்காரர்.. நல்ல நண்பர்” - விளக்கம் கொடுத்த அமைச்சர் மூர்த்தி!

Google Oneindia Tamil News

மதுரை : நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில், வணிக வரித்துறை சோதனை நடைபெற்றது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூரிக்கு சொந்தமாக மதுரையில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த ரெய்டு பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சூரி எனது தொகுதிக்காரர். என்னுடைய நல்ல நண்பர். திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது... புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் அமைச்சர் மூர்த்தி! பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது... புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் அமைச்சர் மூர்த்தி!

சூரி - அம்மன் ஹோட்டல்

சூரி - அம்மன் ஹோட்டல்

திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை ஆகிய இடங்களில் 'அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.

 வணிகவரித்துறை ரெய்டு

வணிகவரித்துறை ரெய்டு

இதையடுத்து நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் வணிக வரித்துறையினர் அண்மையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ஹோட்டலுக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான ஆவணங்கள் இல்லை எனத் தகவல் வெளியானது. அம்மன் உணவகத்தின் மீதான புகார்களுக்கு 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வணிகவரித்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர்.

இனிமேல் ஜி.எஸ்.டியை தனியாக

இனிமேல் ஜி.எஸ்.டியை தனியாக

இதுகுறித்து அம்மன் ஹோட்டல் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர். அதில் நாங்கள் 5% ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகிறோம். தொழிலை லாப நோக்கத்திற்காக நடத்தாமல் விவசாயிகளிடமிருந்து அரிசி காய்கறி போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதன் காரணமாக ஜிஎஸ்டி நம்பர் வாங்கும் பொருளுக்கு கிடையாது. எங்களை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 700 தொழிலாளர்கள் வரை பயன்பெறுகிறார்கள். அதிகாரிகள் கூறியதுபோல், இனிமேல் பில் போடும் போது ஜிஎஸ்டியை தனியாக போட்டு வசூல் செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ஒப்புக் கொண்டோம் எனத் தெரிவித்தனர்.

 பரவிய தகவல்

பரவிய தகவல்

நடிகர் சூரியின் ஹோட்டலை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் திறந்து வைத்தார். இந்நிலையில், சூரியின் ஹோட்டல்களில் வணிக வரித்துறையினர் ரெய்டு நடத்தியதால், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தூண்டுதலின் பேரிலேயே இந்த ரெய்டு நடந்ததாக சில தகவல்கள் பரவின. இந்நிலையில், அமைச்சர் மூர்த்தியே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

சூரி என் தொகுதிக்காரர்

சூரி என் தொகுதிக்காரர்

நடிகர் சூரியின் ஹோட்டல்களில் நடந்த வணிகவரித்துறை சோதனை குறித்துப் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "நடிகர் சூரி எனது தொகுதிக்காரர். என்னுடைய நல்ல நண்பர். திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர். அதில் சிறிதும் உண்மை கிடையாது.

பழிவாங்கும் நடவடிக்கை அல்ல

பழிவாங்கும் நடவடிக்கை அல்ல

வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையீடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை." என விளக்கம் அளித்துள்ளார்.

பயத்தோடு வரி கட்டுறாங்க

பயத்தோடு வரி கட்டுறாங்க

மேலும் பேசிய அமைச்சர் மூர்த்தி, "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வணிகவரித் துறை மூலம் 18,000 கோடி ரூபாய் வருவாயும், பத்திரப்பதிவுத் துறை மூலம் 8300 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்திற்கு சொந்தக்காரர்கள் உரிமையாளராக வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

English summary
Talking about the raid on actor Soori's Amman hotels, Minister Moorthy explained, “Actor Soori is my good friend. Some are spreading false news that the raid was planned. The raid was not carried out as personal vendetta against anyone.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X