மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரெல்லாம் கறுப்புக் கொடி, பலூன்.. அதிரடியாக கறுப்புக் காரில் ஏறிப் பயணித்த மோடி!

Google Oneindia Tamil News

மதுரை: என்னதான் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினாலும் அதற்கு பதிலடியாக கருப்பு காரில் பயணம் செய்தார் மோடி.

தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. அதில் 750 படுக்கை வசதி, 100 எம்பிபிஎஸ் கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.

கறுப்பு கொடி

கறுப்பு கொடி

அப்போது அவரது வருகையை கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவை கறுப்பு கொடி ஏந்தினர்.

வரவேற்பு

வரவேற்பு

மேலும் வைகோ உள்ளிட்டோர் மோடியை கண்டித்து கறுப்பு பலூன்களை பறக்கவிட்டனர். இதனிடையே விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

கறுப்பு காரில் பயணம்

கறுப்பு காரில் பயணம்

இதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதை முடித்துக் கொண்டு தோப்பூர் செல்ல பிரதமர் மோடி கறுப்பு காரில் பயணம் செய்தார்.

போஸ்டர்கள்

போஸ்டர்கள்

இதை பார்க்கும் போது கறுப்பு கொடி காட்டியவர்களுக்கு பாஜக உரிய பதிலடி கொடுத்ததாகவே பார்க்கப்படுகிறது. இது போல் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட வருகை தந்த வைகோவுக்கு வரவேற்பு அளித்து மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

English summary
PM Narendra Modi travels in Black car from Madurai Airport to Thoppur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X