மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகன் போல நடத்தினேன்.. அஜித் மீது அதிர்ச்சியில் சரத் பவார்.. பதிலடி தர களமிறங்கும் சுப்ரியா சுலே!

மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் அரசியல் தாவலால் தற்போது அவருக்கு பதிலாக தனது மகள் சுப்ரியா சுலேவை சரத் பவார் முன்னிலைப்படுத்த முடிவு செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் அரசியல் தாவலால் தற்போது அவருக்கு பதிலாக தனது மகள் சுப்ரியா சுலேவை சரத் பவார் முன்னிலைப்படுத்த முடிவு செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அடுத்த என்ன அரசியல் திருப்பம் நடக்கும் என்று அரசியல் வல்லுநர்களால் கூட கணிக்க முடியவில்லை. அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து நேற்று இவர் ஆட்சி அமைத்தார்.

அஜித் பவார் தற்போது துணை முதல்வராகி உள்ளார். அதேபோல் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகி இருக்கிறார்.

என்ன மும்பை

என்ன மும்பை

இதனால் மகாராஷ்டிராவில் அடுத்து என்ன அரசியல் திருப்பம் நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு நடந்து வரும் அரசியல் திருப்பங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அஜித் பவார் பக்கம் நிற்பதா அல்லது தலைவர் சரத் பவார் பக்கம் நிற்பதா என்று கட்சியினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

என்ன திருப்பம்

என்ன திருப்பம்

இந்த திருப்பம் சரத் பவாரையும் அதிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மகன் போல கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுத்தேன். அவரை பலமுறை மன்னித்து இருக்கிறேன். ஆனால் இப்போது ஏமாற்றிவிட்டார் என்று சரத் பவார் புலம்பி வருகிறார் என்கிறார்கள். தனக்கு பின் கட்சியை அஜித்திடம் ஒப்படைக்கவே அவர் திட்டமிட்டு இருந்தார்.

பவார் குடும்பம்

பவார் குடும்பம்

இந்த புதிய திருப்பத்தால் தற்போது அஜித் பவாரை மொத்தமாக ஓரம்கட்ட சரத் பவார் முடிவு செய்துள்ளார். இதற்காக கட்சிக்குள் விரைவில் அவரில் மகள் சுப்ரியா சுலேவிற்கு முக்கிய பொறுப்பு கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். அதாவது அஜித் பவாருக்கு எதிராக இன்னொரு குடும்ப உறுப்பினரை முன்னிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.

விரைவில் நீக்கம்

விரைவில் நீக்கம்

அதேபோல் விரைவில் அஜித் பவாரின் கட்சி பொறுப்புகளும் பறிக்கப்படும். கட்சியில் இருந்தும் விரைவில் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஏற்கனவே அஜித் பாவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் இருக்கிறார்

அரசியலில் இருக்கிறார்

2009ல் இருந்து சுப்ரியா சுலே அரசியலில் இருக்கிறார். தற்போது இவர் லோக்சபா எம்பியாக உள்ளார். ஒருமுறை கூட அரசியலில் இவர் தோல்வியை சந்தித்தது கிடையாது. அஜித் பவாரின் பல்டி காரணமாக இவர் கட்சிக்குள் முக்கிய நபராக உருவெடுத்து இருக்கிறார், என்று கூறுகிறார்கள்.

English summary
Maharashtra: Sharad Pawar will put her daughter Supriya Sule forth in the party hereafter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X