நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரபஞ்சத்தின் தொடக்கத்தை ஆராய புறப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.. வெற்றிகரமாக ஏவப்பட்டது- சுவாரசியம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே ஜெம் வெப் தொலைநோக்கி நேற்று இரவில் விண்ணில் ஏவப்பட்டது. பிரென்ச் கயானா நாட்டில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

Recommended Video

    சூரியனை தொட்டு விட்டோம்.. Nasa வெளியிட்ட அறிவிப்பு.. பெரிய சாதனை

    நாசா மற்றும் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கனடா ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த The James Webb Space Telescope (JWST) ஐ உருவாக்கி உள்ளது. Ariane flight VA256 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இந்த தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.

    ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்

    இதன் அளவு மிக மிக பெரியது ஆகும். ராட்சச வடிவம் கொண்ட இதை பட்டாம்பூச்சி எப்படி கூட்டுக்குள் இருக்குமோ அது போல மடித்து ராக்கெட்டின் மூக்கு பகுதிக்குள் வைத்து அனுப்பி உள்ளனர். இது சுற்றுவட்டப்பாதையை அடைந்த உடன் பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து கொள்ளுங்கள்.

    விண்வெளி

    விண்வெளி

    ஏற்கனவே முதல் கட்ட பாகங்கள் திறந்து இது விண்வெளி நோக்கிய நீண்ட பயணத்தை தொடங்கிவிட்டது. 20.197 மீட்டர் நீளம். 14.162 மீட்டர் அகலம் கொண்டது. (66.26 ft × 46.46 ft). 1,500,000 km தூரத்தில் இது பூமியில் இருந்து நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து இது இருக்கும் குறைந்தபட்ச தொலைவே 374,000 km தூரம் ஆகும். இதனால் பூமிக்கு வெளியே மிக அதிக தொலைவில் விண்வெளி ஆராய்ச்சியை இது மேற்கொள்ள போகிறது.

    ஆராய்ச்சி

    ஆராய்ச்சி

    இதனால் இது மிக அதிக அளவிலான வெப்பத்தை தாங்க வேண்டும். எனவே இதில் ஒரு பக்கம் தங்க மூலம் பூசிய சோலார் பேனல்கள் சூரிய ஒளி எதிர்ப்பு பில்டர்களும் இருக்கும். இது 270 டிகிரி வெப்பநிலையை தாங்கும். இதன் மறுபக்கம் சூரியனுக்கு எதிர்ப்பக்கம் என்பதால் மைனஸ் 270 டிகிரி குளிர் வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எடை 6,500 kg.

    ஜேம்ஸ் வெப்

    ஜேம்ஸ் வெப்

    1,500,000 km தூரம் என்றால் L2 Lagrange point என்னும் சுற்றுவட்டப்பாதை.ஆகும். அங்குதான் இந்த தொலைநோக்கி சுற்ற போகிறது. இது பூமிக்கு 1,500,000 km தூரத்தில் மேலும் கீழுமாக சுற்றிக்கொண்டே சூரியனை சுற்றும். இதன் குளிர்ச்சியை கட்டுபடுத்த வேண்டும் என்பதால் L2 Lagrange point என்ற இடத்தில் இதன் சுற்றுவட்டப்பாதையை இதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். பூமிக்கு பின் அதன் நிழலில் சூரியனின் சுற்றும் வகையில் இந்த சுற்றுவட்டப் பாதை இருக்கும்.

    தொலைநோக்கி

    தொலைநோக்கி

    இதனால் இரண்டின் ஈர்ப்பு விசையும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது இருக்கும். அதே சமயம் வெப்பநிலையும் குளிரும் அதிகமாக இருக்காது. சரி இந்த தொலைநோக்கி என்ன செய்யும் என்று பார்க்கலாம். ஏற்கனவே 430 கிமீ தொலைவில் விண்வெளியில் Hubble தொலைநோக்கி உள்ளது. Hubble தொலைநோக்கி பூமியை 430 கிமீ தூரத்தில் சுற்றியபடி விண்வெளியை ஆராய்ச்சி செய்து வருகிறது. முதலில் வெறும் சாதாரண கண்ணுக்கு தெரிய கூடிய வெளிச்சங்கள் உள்ள பொருட்களை படம் பிடிக்கவே இது அனுப்பப்பட்டது.

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி


    ஆனால் இதன் படங்கள் சரியாக இல்லாத காரணத்தால் பின்னர் அதில் அகச்சிவப்பு லென்ஸ் வைக்கப்பட்டு விண்ணில் அப்டேட் செய்யப்பட்டது. ஆனாலும் இதன் ரிசல்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த நிலையிலேயே தற்போது விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்ள The James Webb Space Telescope (JWST) தொலைநோக்கி அனுப்பப்பட உள்ளது. Hubble போல இல்லாமல் The James Webb Space Telescope (JWST) அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்க கூடியது. அதோடு பூமியில் இருந்து பல மில்லியன் தொலைவில் இது நிறுத்தப்பட உள்ளதால் பல மில்லியன் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை இது ஆரைய முடியும்.

    நாசா ஆராய்ச்சி

    நாசா ஆராய்ச்சி

    உலகம் தோன்றியது எப்படி என்று கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். இப்படி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த நட்சத்திரங்கள் குறித்து இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய போகிறது.

    விண்வெளி ஆராய்ச்சி

    விண்வெளி ஆராய்ச்சி

    இதனால் இந்த தொலைநோக்கி உலகம் தொடங்கிய காலத்தில் இருந்த நட்சத்திரங்கள், கிரகங்களை இதை வைத்து பார்க்க முடியும். உலகின் முதல் கேலக்ஸி களை கண்டுபிடிக்கவும் இது உதவும். அகச்சிவப்பு கதிர்கள் என்பதால் இதன் இமேஜ் துல்லியமாக இருக்கும். 0.6 to 28.3 μm என்ற அளவில் அகச்சிவப்பு கதிர்களை வெளியிட்டு இது கண்ணாடி திரைகள் மூலம் விண்ணில் இருக்கும் பொருட்களை பார்க்கும். இந்த கண்ணாடிகள் விண்ணுக்கு சென்ற பின் குடை போல விரியும்.

    எப்படி செல்லும்

    எப்படி செல்லும்

    நேற்று இரவு பூமியில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பின் 10000 கிமீ சென்ற பின் ராக்கெட்டில் இருந்து இந்த தொலைநோக்கி பிரிந்து சென்றது. அதன்பின் இதில் இருந்து சூரிய கதிரிகளை தாங்கிக்கொள்ளும் ஷீல்ட் வெளியே வந்தது. இனி வரும் நாட்களில் படிப்படியாக ஒவ்வொரு பாகமாக திறந்து கடைசியாக 14,00,000 கிமீ தொலைவில் முழுமையாக சுற்றுவட்டப் பாதையை அடையும்.

    எத்தனை நாட்கள்

    எத்தனை நாட்கள்

    29 நாட்களில் இது சுற்றுவட்டப் பாதையை அடைந்து பின்னர் விண்வெளியை ஆராய துவங்கும். ஐந்து வருடத்தில் முடிக்கலாம் என்று திட்டமிட்டு கடந்த 20 வருடமாக பணிகளை மேற்கொண்டு இந்த தொலைநோக்கியை உருவாக்கி உள்ளனர். 9 பில்லியன் பட்ஜெட்டை தாண்டி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    English summary
    James Webb Space Telescope successfully launched into space from French Guiana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X