புதுசேரியில் மே 26ம் தேதி சட்டசபை கூட்டம்.. ஒருவழியாக பதவி ஏற்கப் போகும் எம்எல்ஏக்கள் !
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் மே 26ம் தேதி தற்காலிக சட்டசபை தலைவர் முன்பு பதவி பிரமாணம் செய்ய உள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக போகும் நிலையில் இன்னும் அங்கு எம்எல்ஏக்கள் பதவி ஏற்கவில்லை. அங்கு முதல்வராக என். ரங்கசாமி மட்டுமே பதவி ஏற்றுள்ளார். புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதை தவிர எம்எல்ஏக்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. இது போக அங்கு பாஜகவிற்கு 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அதேபோல் அங்கு பாஜக உறுப்பினர்கள் 3 பேர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாஜகவிற்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அங்கு இதனால் பாஜக துணை முதல்வர் பதவி, அல்லது அதிக அமைச்சர் பொறுப்புகளை கேட்குமோ என்று குழப்பம் நிலவி வந்தது. அதேபோல் ரங்கசாமியும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு தள்ளிப்போய்கொண்டே இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். அங்கு புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் மே 26 ம் தேதி காலை 9 மணிக்கு துணை நிலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்று கொள்கிறார்.
தொடர்ந்து அதே நாள் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகின்றது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சட்டப்பேரவை தலைவர் முன்பு பதவி பிரமாணம் செய்து கொள்கின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications