அதிமுக கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு! சேலத்தில் நடந்த சந்திப்பு.. கொங்கு பெல்டில் கூடிய பலம்
சேலம்: 2026 சட்டசபைத் தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்கு முன்னேற்றம் கழகம் மற்றும் கொங்குநாடு முன்னேற்றம் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தங்களின் ஆதரவு கடிதங்களை அளித்தனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி இணக்கமாக இருந்து வரும் சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகள் இணைந்து வருகின்றன. ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், ஜான் பாண்டியன், ஃபார்வர்ட் பிளாக், புதிய நீதிக் கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் புதிய தமிழகம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக தலைமை தீவிரமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் சிறிய அமைப்புகளுடனும் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன. விஜய்யின் வருகை காரணமாக வெற்றி, தோல்விக்கு இடையில் சிறிய வித்தியாசம் மட்டுமே இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கான சிறிய வாய்ப்புகளை கூட இழக்க விரும்பவில்லை. இதன் காரணமாகவே அண்மையில் திமுக கூட்டணிக்குள் தமிழர் தேசம் கட்சியை அமைச்சர் கே.என்.நேரு கொண்டு வந்திருந்தார். முத்தரையர் சமூக வாக்குகள் டெல்டா மாவட்டங்களில் இருப்பதால், இந்த நடவடிக்கையை திமுக மேற்கொண்டது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு மேலும் இரு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 026 சட்டசபைத் தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்கு முன்னேற்றம் கழகம் மற்றும் கொங்குநாடு முன்னேற்றம் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தங்களின் ஆதரவு கடிதங்களை அளித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி இரு நிர்வாகிகளையும் வரவேற்றார். ஏற்கனவே அதிமுக கொங்கு மாவட்டங்களில் வலிமையாக உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலமே அதிமுகவை காப்பாற்றியது என்று சொல்லலாம். அதனை தக்க வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
-
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications