For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“ரணில்” வீடு முன் ரணகளம்.. பிரதமர் பதவி விலகியும் விடாத இலங்கை மக்கள் - தொடரும் போராட்டம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகிய நிலையிலும் அவரது வீட்டின் முன் போராட்டக்காரர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

வெகுண்டெழுந்த இலங்கை மக்கள்... பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைப்பு - பெரும் பதற்றம் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள்... பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைப்பு - பெரும் பதற்றம்

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

ராஜபக்‌ஷே சொத்துக்கள்

ராஜபக்‌ஷே சொத்துக்கள்

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார். பொதுமக்கள் ராஜபக்‌ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதிபர் மாளிகை முற்றுகை

அதிபர் மாளிகை முற்றுகை

இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. அதேபோல் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த நீச்சல் குளம், படுக்கை அறை, சமையல் சூடம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மகிழும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின. பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றப்போவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்‌ஷே அங்கிருந்து தப்பி ஓடினார்.

பிரதமர் ரணில் ராஜினாமா

பிரதமர் ரணில் ராஜினாமா

இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்து இருக்கிறார்.

தொடரும் போராட்டம்

தொடரும் போராட்டம்

ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து விலகியும் அவர் வீட்டின் முன் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. மாறாக தொடர்ந்து அவரது வீட்டை நோக்கி ஏராளமான மக்கள் குவிந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அப்போது போராட்டம் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்களை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Protests continues before Ranil Wickremesinghe home after resigned from Srilankan PM: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகிய நிலையிலும் அவரது வீட்டின் முன் போராட்டக்காரர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X