For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் இருக்கும் விடுதலை புலியினரை விடுவிக்க முடிவு.. ராஜபக்சே அதிரடி திட்டம்.. என்ன காரணம்?

இலங்கையில் தமிழ் எம்பிக்களின் ஆதரவை பெறும் வகையில் அந்நாட்டு சிறையில் உள்ள விடுதலை புலிகளையும், தமிழ் கைதிகளையும் விடுவிக்க அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் தமிழ் எம்பிக்களின் ஆதரவை பெறும் வகையில் அந்நாட்டு சிறையில் உள்ள விடுதலை புலிகளையும், தமிழ் கைதிகளையும் விடுவிக்க அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாளை பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களின் ஆதரவை பெறுவது அனைத்து கட்சிக்கும் முக்கியமாகி உள்ளது.

[ரூ.20 கோடி தரேன்.. எனக்கு ஆதரவு கொடு.. எம்பிக்களை அழைக்கும் ராஜபக்சே.. பரபரப்பு குற்றச்சாட்டு!]

சிறையில் உள்ளவர்கள்

சிறையில் உள்ளவர்கள்

2009 ஈழ போர் முடிந்த பின் நிறைய தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறி நிறைய பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி நூற்றுக்கணக்கான பேர் 9 வருடமாக இவர்கள் சிறையில்தான் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்க முடிவு

விடுவிக்க முடிவு

இந்த நிலையில் தமிழக மக்களின் ஆதரவை பெறும் வகையில் இவர்களை விடுதலை செய்ய ராஜபக்சே முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்பிக்களின் ( ஒருவர் ஏற்கனவே ஆதரவு அளித்துவிட்டார்) ஆதரவை பெறும் வகையில் போர் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

என்ன டிவிட்

இதுகுறித்து ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது டிவிட்டில் சூசகமாக சில விஷயங்கள் தெரிவித்துள்ளார். அதில் ''தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி மனிதர்களின் சுய நல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூத்தின் அடையாளமாக திகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்.'' என்றுள்ளார்.

சொல்கிறார்

மேலும் ''தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள மு/போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி சிறிசேனா மற்றும் பிரதமர் ராஜபக்சே தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர், என்றும் கூறியுள்ளார்.

English summary
Rajapaksa may release Tamil Prisoners to amidst Non-Confidence motion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X