8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம்: 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக கச்சத்தீவு கடற்பரப்பு உள்ளது. ஆனால் கச்சத்தீவு கடற்பரப்புக்கு செல்லும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இலங்கை கடற்படையால் இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை அரிவாளால் வெட்டுவது, கற்களை கொண்டு தாக்குவது இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது
கடந்த சில நாட்களாக தமிழக- இலங்கை வடக்கு பகுதி மீனவர்களிடையே மோதல்கள் நிகழ்ந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அன்று எச்சரித்து விடுவிப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியன்று 5 தமிழக மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. மேலும் 54 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர். கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் அப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்திருந்தது.

நாகை மீனவர்கள்
தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அக்கரைப்பேட்டையில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிவனேசன், சிவகுமார் ஆகியோருக்கு சொந்தமான படகுகள்தான் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது என்ற குற்றச்சாட்டின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

படகுகள் கதி?
இந்த 2 படகுகளில் இருந்த முருகன், கந்தன், சிவசக்தி உள்ளிட்ட 23 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இதேபோல் கேட்பாரற்று கிடந்து முற்றிலும் சிதிலமடைந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications