For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Meesapulimala trekகும் நாக்குத் தள்ளல் Momentuம்!

Google Oneindia Tamil News

நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள்தான். ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன.

ஒரு முறை நாம் மேற்கொள்ளும் பயணமானது நம் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத நினைவுகளை நமக்கு அளிக்கிறது. நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ, காதலருடனோ அல்லது கணவன் - மனைவியாகவோ என இந்தப் பயணம் யாருடன் சேர்ந்து சென்றாலும் இனிதான நிினைவுப் பொக்கிஷமாக மாறி விடுகிறது

A reader's tour guide to Meesapulimala

அவ்வாறு சமீபத்தில் நான் சென்ற பயணம்தான் மீசைபுலி மலையும் மற்றும் கொழுக்குமலையும் அதுவும் முன் பின் தெரியாத 25 பேருடன் ரு பயணம் என்றால் எப்படி இருக்கும்.

அழகான பயணத்தை பற்றி தெரிந்து கொள்ளும் முன், இப்படி ஒரு அருமையான மலையேற்றத்தை இதற்குமுன் நான் அனுபவித்ததே கிடையாது. இதுநாள் வரை என்னுடைய திறன் இவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதெல்லாம் ஒன்னும் இல்லடா தம்பி துணிந்து நடந்தால் இமயம் கூட இமியளவு தான் என்ற தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தவர் எண்களின் தூண்டுகோல் கேப்டன் ராஜீவ் மற்றும் Divine Trekkers.

A reader's tour guide to Meesapulimala

தற்பொழுதுஅந்த சொல்லிலடங்கா அழகிய தருணங்களை பற்றிபார்ப்போம்

முதல் நாள் அனுபவம்
இடம்: குரங்கணிto டாப் ஸ்டேஷன்
தொலைவு: 27 கிமீ
நேரம்: 8.30

Divine Trekkers உடன் இது தான் முதல் அனுபவம் முகநூல் நண்பர் ஒருவர் வாயிலாக அறிமுகம் கிடைத்தது.

நான் இதுநாள் வரை சென்ற அணியினரை விட சற்று வித்தியாசமானவர்களாகவும் அதிக அனுபவம் பெற்றவர்களாகவும், மிகுந்த திறமைசாலிகளாகவும் இருந்தார்கள்.

கேப்டன் ராஜீவ் சொன்னது மாதிரி அதிகாலை 4.30 மணியளவில் தேனியை அடைந்து விட்டேன். மற்ற தோழர்கள் எல்லாம் முந்தைய நாள் இரவே வந்துவிட்டார்கள்.

ஒரு ஊருக்கு செல்கிறோம் என்றால் அந்த ஊரின் உணவையும் பாரம்பரியத்தையும் சுவைக்காமல் இருந்தால் எப்படி எனவே மதுரையில் இறங்கியவுடன் கோனார் மெஸ் கறிதோசையும், இடியாப்பமும் பாயாவும் அப்புறம் மதுரை புகழ் ஜிகர்தண்டாவும் சுவைத்து விட்டு அப்படியே தூங்கா நகரத்தையும் கொஞ்சம் சுற்றி பார்த்துவிட்டு தேனியை சென்றடைய சரியாக 4.30 மணி ஆகிவிட்டது .

அங்கிருந்து அனைவரும் தங்கிருந்த விடுதிக்கு சென்று குளித்து ரெடி ஆகா நீரம் 5.30 ஆகிவிட்டது. பின்பு அங்கிருந்து கேப் மூலம் குரங்கணி அடிவாரம் வர 8 மணி ஆகிவிட்டது அனைவரும் புது முகம் என்பதால் சற்று தயக்கமாக இருந்தது. அப்படி இப்படி என வன முறைகள் எல்லாம் முடித்துவிட்டு நடைப்பயணத்தை தொடங்கினோம்.

கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கினோம். பேச தொடங்கிய அனைவரும் கோவை நண்பர்கள் சொல்லவா வேணும் நம்ம ஊர் குசும்பு கேலி எல்லாம் அப்படியே மாறாமல் பேசியபடியே நடந்தோம்.

உடன் வந்த வன பாதுகாவலர் அருமையான மனிதர் அனைவரையும் முன்னோக்கி அழைத்துக்கொண்டு சிறப்பாக சென்றார் .

A reader's tour guide to Meesapulimala

குரங்கனியிலிருந்து டாப் ஸ்டேஷன் 26 கிமீ சமதள பாதையில் செல்லும் வரை எந்தவிதமான சிரமம் இல்லை முதல் மலையை ஏற ஆரம்பித்தோம். சிலு சிலுவென்று காற்று, சுற்றியும் பறவைகளின் ஓசைகள் மனம் அசைத்தபடியே ஓவொரு அடியும் சென்றது.

பாதி தூரம் சென்றவுடன் லேசான சாரலுடன் கூடிய மழை துளிகள் அப்படியொரு சந்தோசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பச்சை படலம் போத்திய மலைப்பாதைகள், அம்மக்கள், அவர்களின் எழில்மிகு வீடுகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தே....

முக்கால்வாசி தூரம் கடந்து விட்டேன் அதற்குமேல் என்னால் முடியவில்லை காரணம் இவ்வளவு உயரமான மலைகளை ஏறுவது இதுவே முதல் தடவை.

ராஜீவ் தூண்டுகோலால் டாப் ஸ்டேஷன் அடையவே மாலை 4.30 ஆகிவிட்டது. 8 மணிநேரம் நீண்ட நடைபயணம் என் கால்கள் எல்லாம் சோர்வாகி விட்டன மேலே சென்றதும் அப்பட இவ்வளவு பெரிய பாதையை ஒரு வழியாக கடந்து விட்டோமே என்ற எண்ணம் தான் வந்தது .

பின்பு அங்கு உணவருந்திவிட்டு ஜீப்பில் ஏறி மீசைபுலிமலை பேஸ் ஸ்டேஷன் அடைய 2 மணிநேரம் ஆகிவிட்டது. அது கேரளா பாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆகையால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். ஸ்னாக்ஸ், இரவு விருந்து, காலை உணவு , மதிய உணவு, தூங்க டென்ட், ஸ்லீப்பிங் பாக் எல்லாம் சேர்த்து நபர் ஒருவருக்கு 1750 ரூபாய்.

இரவு உணவு சப்பாத்தி, ரைஸ் , காட்டுக்கோழி , காய்கறி , பழம் பருப்பு கடைசல் தேனீர் என அனைத்தும் கொடுத்து அசத்திவிட்டனர். மறுநாள் மிகப்பெரிய மலை ஏற வேண்டும் என்பதால் வந்த களைப்பில் கொஞ்ச நேரம் மட்டும் நண்பர்களுடன் செலவழித்துவிட்டு உறங்க சென்று விட்டேன் ..

அந்த இடம் சுற்றியும் பனி படர்ந்து மரங்களுடன் ரொம்ப அழகாக காட்சியளித்தது இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் உறக்கம் வந்ததே தெரியவில்லை முதல் நாள் போனதும் தெரியவில்லை..

இரண்டாம்நாள் அனுபவம் :

மிரட்டும் மீசைப்புலிமலை அடிவாரம் முகாம் முதல் கொழுக்குமலை டீ எஸ்டேட் வரை.

மறுநாள் காலையில் எழுந்து தேநீர் அருந்திவிட்டு வனத்துறை கொடுத்த அற்புதமான உணவை (புட்டு, கொண்டக்கடலை, ஆம்லெட், ஜாம், ஆப்பிள் , ஆரஞ்சு, ரோஸ்டேட் பிரட் இன்னும் பல) முடித்துவிட்டு கொடுத்த மதிய உணவையும் எடுத்துக்கொண்டு அந்த அழகான இடத்தைவிட்டு செல்ல ஆரம்பித்தோம்.

நேற்று போல் இல்லாமல் சற்று உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் கிளம்பினேன். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,661 அடி உயரத்தில் உள்ளது. இங்கு மலையேற்றமாக மட்டுமே செல்ல முடியும். இந்த இடமானது அழகிலும், பிரம்மிப்பிலும்சுற்றுலா பயணிகளை மிரட்டி வருகிறது.

முதல் இரண்டு மலை சற்றுகடினமாக தான் இருந்தது அதற்க்குபின்பு சென்ற பாதை சொல்லிவிவரிக்கமுடியாத உணர்ச்சி.
காடுகளுடனும் சோலைகளுடனும் சின்னஞ்சிறு புல்களுடனும் சேர்ந்து பயணித்தது சொல்லிலடங்கா அனுபவம். இருந்தாலும் இன்னும் எவ்வளவு தூரம் தான்போக வேண்டும் என்ற ஏக்கம் மனதில் உறுத்திக்கொண்டு தான் இருந்தது.

உடன் வந்துருந்த வாட்சர் அண்ணன் தான் சொன்னார் அதோ அங்கு தெரிகிறது பார் ஒரு மலை அதுதான் கடைசி அந்த உச்சிக்குதான் நாம் இப்பொழுத்து போகவேண்டும் என்று. தொலைவிலிருந்து மலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எவ்வளவுதூரம்
எவ்வளதுஅழகு
மலையில் துயிலும் கனவு
நினைவில்தொடரும்
அம்மலையை அடைய பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அடிவாரத்தில் மேயும் கால்நடைகளின்
கழுத்து மணியோசை கேட்கும் தொலைவில்
அம்மலையை வியப்புடன் பார்த்தவாறே நிற்கிறேன்
மலைப் பாதையில்
புதர்களை விலக்கிக்கொண்டு
பறக்கும்மேகங்களில் நனைந்தவாறு
மலையேற்றம் நடந்து கொண்டிருக்கின்றது
உச்சியைத்தொடும் இலக்கில் மூச்சிரைக்க
மலைப் பள்ளத்தாக்குகளில், ஒளிரும் மின்மினிப் பூச்சிகளாகஅசைந்துகொண்டிருக்கும் நகரம், மேகக் கூடங்களுக்குக்கிடையில் நாங்கள்.

அடைந்த தொலைவிலிருந்து
கடந்த தூரத்தையும்
கடக்க வேண்டிய எல்லைகளையும்
அம்மலை சதா கற்றுத் தருகிறது என்னுள்.

A reader's tour guide to Meesapulimala

உச்சியை அடைந்த பின்பு கிடைத்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை .

நேரம் 2 மணியாகிவிட்டது. நேரம் விரயம் காரணமாக உடனே கொழுக்கு மலையை நோக்கி நகர்ந்த்தோம்.

எழில்மிகு கொழுக்கு மலை :

தேனி மாவட்டம், போடி அருகே மேற்குதொடர்ச்சிமலையின் உச்சியில் அமைந்து உள்ளது தான் எழில் மிகுந்த கொழுக்குமலை.

இது தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளது என்று சொல்வதைவிட, பார்க்கும் இடங்களை எல்லாம் ரசிக்கலாம் என்பதே மிகச்சரியாக பொருந்தும்.

தலைதூக்கி மேக கூட்டங்களை பார்த்து ரசிப்பது அழகு. அதே மேகக்கூட்டங்கள் மலைகளை தழுவிக் கொண்டு ஓய்வு எடுக்க, அதனை மற்றொரு உயரமான மலையின் மேல் இருந்து ரசித்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை நேரில் காட்சியாக கொடுக்கும் இடம் தான் இது. பறந்துவிரிந்த கடலானது, பனிப்பாறை போன்று உறைந்து கிடப்பதை பார்ப்பது போன்று இருக்கும், இப்பகுதியில் மேகக்கூட்டங்கள் தரையிறங்கி இருக்கும் காட்சி.

உலகில் உயரமான இடத்தில் தேயிலை சூரியன் உதித்தபிறகு, அதன் வெப்பத்தால் மேகங்கள் துயில் கலைந்து, மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் செல்வது போன்று மெதுவாக வான் நோக்கி செல்லும் பரவசக் காட்சிகளை இவ்விடத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இந்த இடமானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,100 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த மலையில் விளையும் தேயிலைதான், உலகில் மிக உயரமான இடத்தில் விளையும் தேயிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இங்கு இயற்கை முறையில் தேயிலை விளைவது கூடுதல் சிறப்பு ஆகும். தேயிலை தோட்டங்களை ரசித்தபடி, சுற்றிலும் தாழ்ந்து நிற்கும் மலைகளை பிரமிப்போடு பார்த்து ரசிப்பதற்காக இங்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

அத்துடன், வடமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும்சுற்றுலா பயணிகள் மலையேற்றமாக இங்கு வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன் குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் போகாமலும் சுமார் 11 கிலோமீட்டர் தூரம் மலையேற்றமாக இங்கு சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகினை ரசித்துச் செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் வாகன பாதை கடினமாக இருந்ததால் அங்கிருக்கும் தேயிலை கட்டுக்குள் குதித்து சிறு சிறு காயங்களுடனும் புதர்களில் புரண்டும் அடிவாரத்தை அடைந்தோம். இப்பொழுது சொல்லுங்கள் இது அருமையான பயணமா இல்லையான்னு!

வந்ததும் அங்கு கிடைக்கும் தேநீரை அருந்த மனம் அலைமோதியது. அப்பப்பா என்ன ஒரு சுவை. நான் மட்டும் மூன்று கப் சாப்பிட்டேன். பாதி பேர் குரங்கனியை நோக்கி சென்றனர் நாங்கள் அங்கிருந்து ஜீப் பயணத்தை அனுபவித்தபடியே தேனியை வந்தடைந்தோம்.

English summary
Our reader Ragavendra Jeganathan has narrated his tour guide to Meesapulimala in Idukki district in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X