மனது ஊனமில்லை, போராடாத எந்த மனிதனும் ஊனமே.! இந்த வீடியோவை பாருங்க!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஒரு காலில் மனைவி குழந்தையை வைத்து சைக்கிள் ஓட்டும் மாற்றுத்திறனாளி- வீடியோ

  சென்னை: ஒரு கால் இருக்கும் போதிலும் மற்றொரு காலுக்கு கட்டையை பயன்படுத்திக் கொண்டு மனைவி மற்றும் குழந்தையை சைக்கிளில் அழைத்து செல்லும் இந்த மாற்று திறனாளியின் வீடியோவை பார்க்கும் போது மனதளவில் இவர் ஊனமில்லை என்பதையே காட்டுகிறது.

  மாற்றுத் திறனாளிக்கு வழங்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு அதில் பயணம் செய்வோரை பார்க்கும் போது அவர்களது மனதைரியம் எத்தகையது என்பதை நாம் பாராட்ட மறப்பதில்லை. அதிலும் ஒரு கால் இல்லாத நிலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும் மாற்றுத்திறனாளியின் மன வலிமையை பறைசாற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  A video shows how a handicapped ride cycling

  ஆண்டவன் ஊனமாக படைத்துவிட்டானே என்று நினைத்துக் கொண்டு ஒரே இடத்தில் முடங்கி கிடக்காமல் இன்று பலர் தங்களால் இயன்ற தொழிலை செய்து பிழைத்து வருகின்றனர். திடகாத்திரமாக இருப்பவர்களே உழைக்க சோம்பேறித்தனமாக இருந்து கொண்டு அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் காலத்தில் எங்கோ வேலைக்கு சென்றுவிட்டு தனது மனைவி, குழந்தையை நெடுஞ்சாலையில் சைக்கிளில் அழைத்து செல்லும் இளைஞர் குறித்த வீடியோ காட்சிகள் நெகிழ வைக்கின்றன.

  ஒரு காலால் சைக்கிளையும், மற்றொரு கால் இல்லாததால் அதற்கு பதில் ஆளுயர கட்டையையும் முட்டாக வைத்து கொண்டு மனைவி, குழந்தையையும் ஏற்றிக் கொண்டு செல்லும் இவரது மனதைரியத்தையும் குடும்ப பாசத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது. மாற்றுத் திறனாளிகளுக்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள். வாழ்க்கை நன்றாக இருக்க போராடினால் மட்டும்தான் முடியும்.. கடவுளையோ பிறரையோ நொந்து கொள்வதில் பயனில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A handicapped man rides cycle with his one leg and balances with log as another leg. He also carries his wife and child in the back seat. How great he is!

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற