மூடப்பட்ட 285 டாஸ்மாக் மதுபான கடைகளை மீண்டும் திறக்கும் அரசு? காரணம் இதுதான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றப்படவுள்ளதால் தமிழகத்தில் மூடப்பட்ட 285 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து பல மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட மதுக்கடைகள்
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அகற்றப்பட்டன.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து அதிகரித்து வருவதற்கு மது விற்பனையே காரணம் என்பதும், அதனால் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன் பேரில் தமிழகத்தில் 285 டாஸ்மாக் மதுக்கடைகள் நெடுஞ்சாலை பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.

பல கோடி இழப்பு

பல கோடி இழப்பு

மாநில சாலைகளில் செயல்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. அவற்றை ஈடுசெய்ய நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்தது. ஆனால் பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சில திருத்தங்கள்

சில திருத்தங்கள்

மதுக் கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்ததில் தமது முந்தைய தீர்ப்பில் சில திருத்தங்களை சுப்ரீம் கோர்ட் மேற்கொண்டது. அதன்படி 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளை பொருத்தவரை, அவற்றில் இருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

மாவட்ட சாலைகள்

மாவட்ட சாலைகள்

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மதுக்கடைகளை மூடுவதை தவிர்ப்பதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகள் என்ற பட்டியலின் கீழ் வகைப்படுத்தும் முயற்சியில் பெரும்பாலான மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஹரியாணா மாநிலம், சண்டீகர் நகரில் இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக வகைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அங்குள்ள தொண்டு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

நீதிபதி கூறியது என்ன?

நீதிபதி கூறியது என்ன?

அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியதாவது: நகர்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகப்படி இருப்பதால் அங்கு வேகமாக செல்வது இயலாத காரியம். அது போன்ற நெடுஞ்சாலைகள்தான் மாவட்ட சாலைகளாக வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் எந்த தவறும் இல்லை.

நெரிசலற்ற சாலைகள்

நெரிசலற்ற சாலைகள்

ஒருவேளை நகரங்களில் வாகன நெரிசலற்ற நெடுஞ்சாலைகளை சுட்டிகாட்டினால் அது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதி தெரிவித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் மூடப்பட்ட 285 மதுக்கடைகளை மீண்டும் திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சி மேற்கொள்கிறது. இதனால் பார் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Over 250 Tasmac shops in TN National Highways will be opened soon.
Please Wait while comments are loading...