தமிழகத்தில் அசாதாரண சூழல்.. சாதி, மதக் கலவரங்களை தூண்ட திட்டம்.. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

உத்தமபாளையம்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை பயன்படுத்தி சமூக விரோதக் கூட்டம் சாதி, மதக் கலவரங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன்அன்சாரி தேனி மாவட்டத்திற்கு நேற்று சென்றார். அங்கு அவர் உத்தமபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தற்போது தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று சுட்டிக் காட்டினார்.

Anti-Social elements try to enter TN, says Thamimun Ansari

மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சமூகவிரோத சக்திகள் தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்து வருகிறது என்றும், கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Perarivalan’s mother Arputham Ammal has thanked Tamilnadu MLAs - Oneindia Tamil

சாதி, மத கலவரத்தை உண்டாக்க கூடிய, சமூகவிரோத சக்திகளிடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்க வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anti-Social elements are trying to create religious and caste sensation in TN, says Thamimun Ansari
Please Wait while comments are loading...