வேலூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சி.. பொதுமக்கள் கூச்சல்.. ஓட்டம் பிடித்த மர்மநபர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வேலூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சி-வீடியோ

  வேலூர்: வேலூர் அருகே நள்ளிரவில் ஏடிஎம் மெஷினை உடைத்து மர்மநபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள பகுதி கீழ் ஆலத்தூர். இங்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.

  ATM robbery attempt near Vellore

  இந்நிலையில் நேற்றிரவு இந்த ஏடிஎம்-க்கு மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க திட்டமிட்டு கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை அவ்வழியாக சென்று பார்த்த சிலர், நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர்.

  பொதுமக்களின் சத்தத்தை கேட்ட அந்த கொள்ளையர்கள் தலைதெறிக்க தப்பி ஓடி மறைந்தனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது.

  ATM robbery attempt near Vellore

  இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விரைந்து வந்த அவர்கள், கைரேகை நிபுணர், ஏடிஎம்-மின் சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணையை கையிலெடுத்துள்ளனர். ஆந்திர கர்நாடக எல்லையோரம் அமைந்துள்ள குடியாத்தம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சிகள் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், உடனடியாக அனைத்து ஏடிஎம் மையங்களுக்கும் காவர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Some of the mysterious people who came to ATM late last night near Gudiyatham were engaged in the robbery. The public was shocked to see this. The looters heard the noise and fled to escape. Police have been immediately informed about the incident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற