இது உலகமகா நடிப்புடாப்பா சாமி.. பிக்பாஸ் போகும் ரூட்டே சரியில்லையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்டிமென்ட் காட்சிகளை வைத்து கண்ணை கசக்கச் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரு நாட்கள் ஜூலியானாவை வைத்து களத்தை நகர்த்திய நிகழ்ச்சியாளர்கள், நேற்று வையாபுரியை பிடித்துக்கொண்டனர்.

முன்னதாக விஜய் டிவி வெளியிட்ட புரமோஷன் வீடியோவில், சக பங்கேற்பாளர் காயத்ரி, எச்சைகள் என திட்டுவதைபோலவும், அதைத் தொடர்ந்துதான் வையாபுரி அழுவதை போலவும் காட்டி ஹைப் ஏற்படுத்தியிருந்தனர்.

அழுகாச்சி

அழுகாச்சி

புரமோஷன் வீடியோவில் காட்டியது ஒன்று, நிகழ்ச்சியில் நடந்ததோ மற்றொன்று. நிகழ்ச்சி ஆரம்பித்ததுமே வையாபுரி அழுதுகொண்டிருந்தார். அவரை ஜூலி தேற்றிக்கொண்டிருந்தார். கஞ்சா கருப்பு, நீங்கதான் பல பேருக்கு ஆறுதல் சொல்றவங்க, நீங்களே இப்படி அழுகலாமா.. என கமெண்ட் அடித்தபடியே நடந்து சென்றார்.

துடித்த ரசிகர்கள்

துடித்த ரசிகர்கள்

அட, என்னதான் ஆச்சி என்று பிக்பாஸ் பார்த்த ரசிகர்கள் துடித்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து, கேமரா முன்பு வந்து நின்றுகொண்ட வையாபுரி, தனது அழுகைக்கான காரணத்தை தேம்பியபடியே, கண்களை துடைத்தபடியே கூறினார்.

குட்மார்னிங் சொல்லாதது குற்றமாய்யா

இத்தனை வருட காலமாக காலை எழுந்ததும் என மனைவிக்கு கூட குட் மார்னிங் சொன்னது கிடையாது. இப்போது உடன் தங்கியுள்ள யார் யாருக்கோ சொல்கிறேன். தாங்க்ஸ் போன்ற வார்த்தைகளையும் மனைவியிடம் சொன்னதில்லை. இப்போது மனைவிக்கு சொல்லி முடியவில்லை என்று வருந்துகிறேன் என்று கண்ணீர் விட்டு அழுதார்.

ஆரம்பிச்சுட்டாங்கல்ல

ஆரம்பிச்சுட்டாங்கல்ல

மேலும், இந்த இரு நாட்களில் உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொண்டதாகவும், மனைவி, பிள்ளைகளை மிஸ் செய்வதாகவும் உருக்கமாக பேசினார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஆரம்பிச்சுட்டாங்க, பிக்பாஸ் வேலையை, என கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.

2 நாளில் ஞானியாகலாம் வாரீர்

2 நாளில் ஞானியாகலாம் வாரீர்

ரியாலிட்டி ஷோக்களில் கண்ணீர், சென்டிமென்ட் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவேதான் இரண்டே நாளில் ஞானி ஆகிவிட்டதை போல ஒரு நடிகரை வைத்து கண்ணீர் சிந்த வைத்துள்ளனர் பிஸ்பாக் குழுவினர் என்று நெட்டிசன்கள் கேலி செய்கிறார்கள். நேற்று சென்டிமென்ட் காட்சிகளை ஓட்டிய பிக்பாஸ் இன்று, ஓவியா-கஞ்சாகருப்பு மோத உள்ளனர் என உசுப்பேற்றி புரமோ வீடியோ வெளியிட்டுள்ளது. பிக்பாஸ்-நீங்க, நடத்துங்க பாஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Biggboss Tamil under netizens radar as it's looks pre scripted drama. Vaiyapuri's over acting is one of the reason.
Please Wait while comments are loading...